தொலை தூரம் ஓடி பறவை போல் பறந்துக் கடினமான கேட்ச்சைப் பிடித்த முகேஷ் சவுத்ரி – வீடியோ இணைப்பு

0
653
Mukesh Choudhary dive catch

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 49வது போட்டியில், மஹராஷ்ட்ராவின் புனே மைதானத்தில். பெங்களூர் அணியும், சென்னை அணியும் தற்போது பலப்பரீட்சை நடத்துகின்றன. புனே மைதானத்தில் பனிப்பொழிவின் தாக்கம் பெரிதாய் இருக்காது என்பது நல்ல விசயம் இரு அணிகளுக்கும்.

பெங்களூர் அணி தான் விளையாடிய பத்து ஆட்டங்களில் ஐந்து வெற்றி பெற்றுப் பத்துப் புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. சென்னை அணி ஆடிய ஒன்பது ஆட்டங்களில் மூன்று ஆட்டங்களை வென்று, ஆறு புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.

முதலில் டாஸில் வென்ற தோனி முதலில் பீல்டிங்தை தேர்வு செய்தார். பெங்களூர் அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. சென்னை அணியில் சான்ட்னருக்குப் பதில் மொயீன்அலி வந்திருக்கிறார். பெங்களூர் அணிக்கு பேட்டிங்கை துவங்க வந்த பாஃப் அதிர்ஷ்டத்தில் ரன் சேர்த்த, விராட்கோலியால் ஒன்-டே இன்னிங்ஸ்தான் ஆட முடிந்தது. இருவரையுமே மொயீன் அலி சிறப்பாக வழியனுப்பி வைத்தார். நடுவில் மேக்ஸ்வெல் தேவையில்லாமல் ரன்-அவுட் ஆகி கிளம்பினார்.

இதற்கடுத்து ஜோடி சேர்ந்த ரஜீத் பட்டிதாரும், மகிபால் லோம்ரரும் மிகச்சிறப்பாக ஆடி அதிரடியாய் அணியை மீட்டெடுக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் ப்ரட்டோரியஸின் 16வது ஓவரின் முதல் பந்தை பட்டிதார் தூக்கியடிக்க, இந்தத் தொடரில் கைக்கு வந்த கேட்சை எல்லாம் விட்ட முகேஷ், எல்லோரும் மூக்கின் மேல் விரல் வைக்கும் விதமாக, டீப் ஸ்கொயர் லெக் திசையிலிருந்து ஓடிவந்து விழுந்து பிடித்து திகைக்க வைத்தார். இந்தத் தொடரின் இதுவரை சென்னை அணி 17 கேட்ச்சுகளை தவறவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!