கடைசி ஓவரில் முகேஷ் சவுத்ரி செய்த செய்யலால் பொறுமையை இழந்து கோவப்பட்ட கேப்டன் தோனி – வீடியோ இணைப்பு

0
6974
MS Dhoni scolds Mukesh Choudhary

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடந்து முடிந்த ஆட்டத்தில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்ராஜ் 57 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 6 சிஸ்சர் உட்பட 209 ரன்கள் குவித்தார்.பின்னர் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே குவித்தது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 33 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் உட்பட 64* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -
கடைசி ஓவரில் நடந்த சுவாரசிய நிகழ்வு

நேற்று ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஹைதராபாத் அணி வெற்றி பெற 38 ரன்கள் தேவைப்பட்டது. எப்படியும் சென்னை அணிதான் வெற்றி பெறப் போகிறது என்கிற முடிவுக்கு ரசிகர்கள் அனைவரும் வந்து விட்டனர்.

நேற்றைய போட்டியில் மூன்று ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய முகேஷ் சவுத்ரிக்கு 4வது ஓவர் கொடுக்கப்பட்டது. அவர் வீசிய முதல் இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி சென்றது.

3வது பந்தை டாட் பாலாக வீசியவர் 4-வது பந்தை லெக் சைடில் வீசினார். அது எதிர்பார்த்த லைனில் போகாமல் மிகப்பெரிய சென்றது. முதல் மூன்று பந்துகளில் 10 ரன்கள் போன பொழுதிலும் அமைதியாக இருந்த மகேந்திர சிங் தோனி அவர் வீசிய வைடை கண்டு உடனடியாக முகேஷ் சவுத்ரியிடம் சென்றார். மகேந்திர சிங் தோனி அவரிடம் ஒரு சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அவர் எப்படி பேசியிருப்பார் என்று அனிமேஷனில் ஒரு வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் “புதிதாக எதுவும் முயற்சி செய்ய வேண்டாம், எப்பொழுதும் போல சரியான லைனில் பந்து வீசினால் போதும்” என்பது போல மகேந்திர சிங் தோனி சவுத்ரிக்கு பாடம் புகட்டினார்.

இருப்பினும் அந்த ஒரு ஓவரில் மொத்தமாக இருபத்தி நான்கு ரன்கள் சென்றது. இறுதியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மீதமுள்ள ஐந்து போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றால் (அதிக ரன் ரேட் புள்ளிகளை பெற்று) ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.