ஓட்டுநராக தோனி நடித்த புதிய ஐ.பி.எல் ப்ரோமோ வெளியானது – வீடியோ இணைப்பு

0
209
MS Dhoni IPL Promo 2022

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்க்கும் இந்தியன் பிரீமியர் லீக் வருகின்ற மார்ச் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஆடுகிறது. இம்முறையும் நேரடி ஒளிபரப்பு ஒப்பந்தத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கோலாகலமாக தொடங்கவுள்ள ஐ.பி.எல் தொடருக்கு நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை வைத்து விளம்பரப் படம் தயாரக்கப்ட்டு வந்தது.

தற்போது அதை ஒளிபரப்ப தொடங்கியுள்ளனர். சமீபத்தில் எம்.எஸ்.தோனி நடித்த ப்ரோமோவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவியது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போல தோற்றம் கொண்டிருந்தார் தோனி. பாட்ஷா படத்தில் ஆட்டோ ஓட்டுநர் போன்று இருப்பதாக ரசிகர்கள் உணர்ந்தனர். மேலும், எம்.எஸ்.தோனி அவர்கள் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியானது புதிய ஐ.பி.எல் ப்ரோமோ

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று ( மார்ச் 4 ) மொஹாலியில் தொடங்கியது. விராட் கோஹ்லியின் 100வது டெஸ்ட் போட்டி என்பதால் அவரை பிசிசிஐ கவுரவித்து அழைத்தது. அதுமட்டுமில்லாமல் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா இன்று தன் முதல் டெஸ்ட்டில் களமிறங்குகிறார்.

முதல் செஷன் முடிவில் இந்திய அணி 109 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்து மதிய உணவுக்கு சென்றது. கேப்டன் ரோஹித் ஷர்மா 29 ரன்களிலும் மயாங்க் அகர்வால் 33 ரன்களிலும் பெவிலியன் திரும்ப ஹனுமா விஹாரி 30 & கோஹ்லி 15 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். உணவு இடைவேளையின் இடையே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் புதிய ஐ.பி.எல் ப்ரோமோவை ஒளிபரப்பு செய்தனர்.

ஒரு நிமிட வீடியோவில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி பேருந்து ஓட்டுநராக நடித்துள்ளார். பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு படிக்கட்டில் தோனி அமர்ந்திருக்க பயனாளர்கள் அவர்களது சீட்டில் அமர்ந்து, 2020ஆம் ஆண்டு பஞ்சாப் – மும்பை அணிகள் ஆடிய டபுள் சூப்பர் ஓவரைக் கண்டுகளிப்பது போல் இந்த விளம்பரப் படம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் இது போன்று வேறு சில விளம்பரப் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.