கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் அதிரடியாக பினிஷ் செய்த பினிஷர் தோனி ; அவருக்கு தலை வணங்கிய ஜடேஜா – வீடியோ இணைப்பு

0
820
Jadeja bowed down to MS Dhoni

2022 ஐ.பி.எல் சீசனின் 33-வது ஆட்டம், சென்னை அணியும் மும்பை அணியும் மோதுவதால் ஏற்கனவே எதிர்பார்ப்புகள் வழக்கம்போல் எகிறி இருந்தது. அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல், பரபரப்பான திருப்பங்களோடு ஹை டென்சன் மேட்ச்சாக நடந்து முடிந்துள்ளது.

முதலில் டாஸ் வென்ற ஜடேஜா பீல்டிங்கை தேர்வு செய்ய, ரோகித், இஷான், ப்ரிவீஸ் என மூவரையும் பெவிலியன் அனுப்பினார் முகேஷ். அடுத்து சூர்யா கொஞ்சம் சிறப்பாக ஆட, அவரை சான்ட்னர் அவுட் செய்ய, சிக்கலில் விழுந்தது மும்பை அணி, ஆனால் இளம் வீரரான திலக் வர்மா பொறுமையாக பொறுப்பாக ஆடி அரைசதமடித்து, அணியைக் காப்பாற்றி 155 ரன்களை எட்ட வைத்தார்.

- Advertisement -

அடுத்து சென்னை அணிக்கு பேட் செய்ய வந்த ருதுராஜ், சான்ட்னர் ஏமாற்ற, உத்தப்பாவும், அம்பதியையும் சரிவிலிருந்து அணியை மீட்டனர். ஆனால் இவர்கள் இருவரும் ஆட்டமிழக்க, சென்னை அணி சிக்கலில் மாட்டிக்கொண்டது.

ஆனால் தோனி களத்தில் இருந்ததால் இரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர். பும்ரா ஓவரை பார்த்து ஆடி, உனட்கட் ஓவருக்கு காத்திருந்து தோனியும் ப்ரட்டோரியசும் விளையாடினர். இந்த நிலையில் கடைசி ஓவருக்கு 17 ரன்கள் தேவைப்பட, உனட்கட்டின் முதல் பந்திலேயே ப்ரட்டோரியஸ் அவுட் ஆனார். அடுத்த பந்தில் பிராவோ சிங்கிள் ரன் அடிக்க தோனி ஆட வந்தார். இப்போது நான்கு பந்துகளுக்கு 16 ரன்கள் தேவை. மூன்றாவது பந்தில் சிக்ஸ் அடித்த தோனி, அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார். அதற்கடுத்த பந்தில் இரண்டு ரன்கள் கிடைக்க, இப்போது கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவை. ஆனால் பதட்டமேபடாத தோனி அனாசயமாக லாங்-லெக்கில் பவுண்டரி அடித்து அணியை வெற்றிப்பெற வைத்தார். ஆட்டம் வெற்றிக்கரமாக முடிந்ததும் மைதானத்திற்குள் வந்த கேப்டன் ஜடேஜா தோனியின் கால்களைத் தொட்டு கும்பிட்டது குறிப்பிடத்தக்க விசயம்!