பேட்டில் படாத பந்திற்கு அவுட் கொடுத்த நடுவர் ; டி.ஆர்.எஸ் வாய்ப்பு இருந்தும் பயன்படுத்தாமல் சென்ற மிட்செல் மார்ஷ் – வீடியோ இணைப்பு

0
600
Mitchell Marsh Wicket

லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான போட்டி தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் லக்னோ அணி குவித்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 51 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார்.

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தற்போது டெல்லி அணி விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த அணியில் இன்று ஓபனிங் வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த மிட்செல் மார்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி மிக நிதானமாக விளையாடினார்கள். மிட்செல் மார்ஷ் 37 ரன்களும் ரிஷப் பண்ட் 44 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

16 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு தந்த அணி தற்போது 146 ரன்கள் எடுத்த நிலையில் விளையாடிக் கொண்டிருக்கிறது. அக்ஷர் பட்டேல் மற்றும் ரோவ்மென் போவெல் இருவரும் தற்போது அதிரடியாக விளையாடி கொண்டிருக்கின்றனர்.

அபராத முடிவால் ஆட்டமிழந்த மிட்செல் மார்ஷ்

19 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 37 ரன்கள் குவித்து அதிரடியாக மிட்செல் மார்ஷ் விளையாடிக் கொண்டிருந்தார். ஆட்டத்தின் 8-வது ஓவரை கிருஷ்ணப்ப கவுதம் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட மிட்செல் மார்ஷ் அடிக்க முயற்சித்த பொழுது பந்து பேட்டில் கனெக்ட் ஆகவில்லை.

திடீரென கிருஷ்ணப்ப கவுதம் அம்பையரிடம் என்று கேட்க அம்பையரும் அவுட் கொடுத்து விட்டார். ஆனால் அவர் அவுட் கொடுக்கப்பட்ட பின்னர் மறுஆய்வு செய்து பார்க்கையில் மிட்செல் மார்ஷ் பேட்டில் பந்து படவே இல்லை. அல்ட்ரா எட்ஜ் டெக்னாலஜியை பயன்படுத்தி பார்க்கையில் பந்து துளிகூட பேட்டில் படவில்லை. தவறான முடிவால் மிட்செல் மார்ஷ் தனது விக்கெட்டை இழந்துள்ளார்.

- Advertisement -

நடுவர் குறித்த தவறான முடிவால் டெல்லி அணி மேனேஜ்மெண்ட் சற்று வருத்தத்துடன் காணப்பட்டனர். டெல்லி அணி ரசிகர்களும் இதுகுறித்து சமூக வலைதளத்தில் தங்களுடைய ஆதங்கத்தை கமெண்ட்டு மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.