விராட் கோலிக்கு தந்திரமாக ஃபீல்ட் செட் செய்து விக்கெட் எடுத்த தோனி – வீடியோ இணைப்பு

0
597
Dhoni fieldset for Kohli

ஐ.பி.எல் தொடரில் நிறைய இரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டம், நேற்று மும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் ஹை-ஸ்கோர் மேட்ச்சாய் நடந்து முடிந்திருக்கிறது.

முன்னதாக டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்ய, சென்னை அணிக்குத் துவக்கம் தர வந்த ருதுராஜ் இந்த முறையும் ஏமாற்ற, மொயீன்அலியும் ஏமாற்றினார். ஆனால் ஒருமுனையில் நின்ற உத்தப்பாவும், அடுத்து வந்த சிவம் துபேவும் பெங்களூர் அணியின் பந்து வீச்சை பிய்ந்தெறிந்து விட்டனர்.

ஏழு ஓவர்களுக்கு 37 ரன்கள் என்றிருந்த ஆட்டத்தை, இருபது ஓவர்களில் 215 ரன்களுக்கு கொண்டுபோகும்படியான பேய் ஆட்டம் ஆடிவிட்டார். உத்தப்பா 88 [50], சிவம்துபே 96 [45] ரன்களை குவித்தார்கள். இவர்கள் இருவரும் 17 சிக்ஸர்களை நொறுக்கியது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ஆட வந்த பெங்களூர் அணிக்கு கேப்டன் பாஃப் உடனே வெளியேற விராட்கோலி களம்புகுந்தார். இங்குதான் ஆன்-பீல்ட் கேப்டன்சியில் தான் எதனால் கிங் என்று நிரூபிக்கும் விதமான தந்திரம் ஒன்றை செய்தார் மகேந்திரசிங் தோனி.

அந்த ஓவரை முகேஷ் வீசப்போக, அதுவரை டீப் ஸ்கொயர் லெக்கில் பீல்டர் இல்லை. தோனி உள்வட்டத்தில் இருந்த சிவம்துபேவை உடனே டீப் ஸ்கொயர் லெக் பொசிசனுக்கு நகர்த்தினார். முகேஷ் ஒருமாதிரி குட்லென்த்தில் வீச, ஏறி வந்த விராட்கோலி அதை பிளிக் ஆட, பந்து நேராக சிவம் துபேவின் கைகளில் போய் ஒட்டிக்கொண்டது விராட்கோலி அவுட்.

தற்போது இது சமூகவலைத்தளங்களில் வீடியோவாகவும், மீமாகவும் பரவி வருகிறது!