கடைசி 6 பந்தில் 25 ரன்கள் ; பெர்குசன் ஓவரில் ஹாட்டிரிக் சிக்ஸ் அடித்து அதிரடி காட்டிய இளம் வீரர் ஷாஷஙக் சிங் – வீடியோ இணைப்பு

0
1019
Marco Jansen and Shashank Singh

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 40வது ஆட்டத்தில், மும்பை வான்கடேவில் நடந்துகொண்டிருக்கும் ஆட்டம் முக்கியமானது. ஏனென்றால் பாயிண்ட்ஸ் டேபிளில் ஆதிக்கம் செலுத்துக்கொண்டிருக்கும், பந்துவீச்சைக் கூர்மையாக வைத்துக்கொண்டிருக்கும் இரு அணிகளான குஜராத் அணியும், ஹைதராபாத் அணியும் மோதும் போட்டி!

குஜராத் அணி கடந்த ஆட்டத்திலிருந்து எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஹைதராபாத் அணி சுஜீத்திற்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரைக் கொண்டுவந்திருந்தது.
முதலில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்ய, முகம்மது சமி முதல் ஓவரில் உதிரி ரன்களாக மட்டும் பத்து ரன்களை விட்டுக்கொடுத்தாலும், பவர்-ப்ளேவில் மிகச்சிறப்பாக பந்துவீசி கேப்டன் கேன் வில்லியம்சன், அதிரடி வீரர் ராகுல் திரிபாதியின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனாலும் பவர்-ப்ளேவில் ஹைதராபாத் 50 ரன்களை கடந்திருந்தது.

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த அபிஷேக் ஷர்மா, எய்டன் மார்க்ரம் ஜோடி பொறுப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு, அதிரடியாகவும் ரன்களை குவித்தார்கள். குறிப்பாக இந்திய இளம்வீரர் அபிஷேக் ஷர்மா ரஷீத்கானை வெளுத்து வாங்கினார். அவரிடமிருந்து மட்டும் மூன்று சிக்ஸர்களை பிடுங்கினார். அபிஷேக் ஷர்மா 65 [42], எய்டன் மார்க்ரம் 56 [40] ரன்களில் ஆட்டமிழந்ததும், இறுதிக்கட்ட ஓவர்களில் ரன் குவிப்பில் ஒரு தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையில் வாஷிங்டன் சுந்தரும் ரன் அவுட் ஆகியிருந்தர்.

இந்த நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஷாசாங்க் சிங் அல்ஜாரி ஜோசப்பின் 19வது ஓவரில் பவுண்டரியோடு சிறப்பாக ஆரம்பித்தார். அதிவேக பெர்குசன் 20வது ஓவரை வீச, முதல் பந்தில் யான்சென் அபாரமாய் சிக்ஸர் அடித்து, அடுத்த பந்தை தவறவிட்டு, அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்து, ஷாசாங்க் சிங்கிற்கு ஆட வாய்ப்பு கொடுத்தார். மூன்று பந்துகளில் மிட்-விக், பைன்-லெக், லாங்-ஆப் திசைகளில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அட்டகாசப்படுத்திவிட்டார் ஷாசாங்க் சிங். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 6 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க, ஹைதராபாத் இருபது ஓவர்கள் முடிய 195 ரன்களை குவிந்தது. கடைசி ஓவரில் மட்டும் 25 ரன்கள் வந்தது.

குறைந்தது 25 ரன்களுக்கு ஐ.பி.எல்-ல் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தவர்கள் பட்டியலில் ஷசாங்க் சிங் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

ஷசாங்க் சிங்- குஜராத்- 416.66- 2022
பாலசந்திர அகில் – டெக்கான்- 385.71- 2008
விராட் கோலி- ராஜஸ்தான்- 357.14- 2019