புவனேஷ்வர் குமாரின் விக்கெட்டை கொண்டாட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட கேப்டன் கே.எல்.ராகுல் – வீடியோ இணைப்பு

0
12501
KL Rahul Captain LSG

நேற்று ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் பனிரென்டாவது ஆட்டம் கே.எல்.ராகுலின் அணிக்கும், கேன் வில்லியம்சனின் ஹைதராபாத் அணிக்கும் இடையே, நவி மும்பையில் அமைந்துள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் பரபரப்பாய் நடந்து முடிந்துள்ளது!

டாஸில் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பனிப்பொழிவை மனதில் வைத்து, முதலில் தன் அணி பந்துவீசுமென்று அறிவித்தார். ஆனால் நேற்றைய போட்டியில் இரண்டாவதாய் லக்னோ அணி பந்துவீசும் பொழுதும் பனிப்பொழிவு பெரியளவில் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

லக்னோ அணியின் பேட்டிங்கை துவக்க, கேப்டன் கே.எல்.ராகுல் விக்கெட்கீப்பர் குயின்டன் டிகாக் களம் புகுந்தனர். ஆரம்பமே அதிர்ச்சியாய், டிகாக், லீவிஸை வாஷிங்டன் வெளியேற்ற, அடுத்து வந்த மனிஷ் பாண்டேவை ரொமாரியோ ஷெப்பர்ட் வெளியேற்றினார். சிக்கலில் இருந்த லக்னோ அணிக்கு கே.எல்.ராகுல் 68 [50], தீபக் ஹூடா இருவரும் 51 [33] இணைந்து அரைசதம் அடிக்க, இருபது ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்தது.

ஆனால் ஹைதராபாத் அணிக்கு ராகுல் திரிபாதி 44 [30], நிக்கோலஸ் பூரன் 34 [24] தவிர மற்ற யாரும் சரியான பங்களிப்பு செய்யாததால், இருபது ஓவர் முடிவில் 157 ரன்கள் மட்டுமே அடித்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
ஆவேஷ்கான் மிகச் சிறப்பாகப் பந்துவீசி, 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தப் போட்டியின் இரண்டாவது பகுதியின் போது, கடைசி மூன்று பந்தில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவை என்றிருக்க, ஹோல்டர் வீசிய பந்தில் புவனேஷ்வர்குமார் விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்மிழந்து, ஏறக்குறைய லக்னோ அணியின் வெற்றியை உறுதி செய்வார்.

- Advertisement -

இதை லக்னோ வீரர்கள் கொண்டாடிய போதுதான், கேப்டன் கே.எல்.ராகுல் வேண்டாமென்று தடுத்து பீல்டிங் பொசிசனிற்கு போகச் சொன்னார். காரணம் பந்துவீச்சை 11 மணிக்குள் முடிக்க வேண்டுமென்பது விதி. அதனால்தான் கே.எல்.ராகுல் இப்படிச் செய்திருக்கிறார். கேப்டனாக கே.எல்.ராகுலின் இந்த விழிப்புணர்வு சிறந்ததே!