நூலிழையில் தப்பித்த வங்கதேச வீரர் – இலங்கை வீரரின் செயலால் ரசிகர்கள் அதிருப்தி

0
116
Lahiru Kumara and Liton Das

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு பிறகு ஆசிய அணிகள் விளையாடும் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்தது வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதும் போட்டி. கடந்த 2018 ஆம் ஆண்டு நிதாஸ் டிராபி தொடர் நடந்த போதே இந்த இரண்டு அணிகளுக்கும் சிறுசிறு முட்டல் மோதல்கள் உருவாக தொடங்கின. அதன் பிறகு சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் ஆங்காங்கே மோதிக் கொண்டு தங்களின் நாட்டுப்பற்றை வெளிக் காட்டிக் கொண்டிருந்தனர். தற்போது டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12-இல் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் வங்கதேச அணி பேட்டிங் பிடித்தது. ஆட்டத்தின் நான்காவது ஓவரை இலங்கை அணியின் லஹிரு குமாரா வீசினார். இதை அடிக்க முயன்ற வங்கதேச அணி வீரர் நயீம் நேராக குமாரின் கைகளுக்குப் பந்தை அடித்தார். உடனே ரன் அவுட் செய்ய முயன்ற இலங்கை அணியின் குமாரா பந்தை நேராக பேட்டிங் வீரரின் தலைக்கு எறிந்தார். சற்றும் எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் நயீம் திகைத்துப் போனார். ஆனால் சரியான நேரத்தில் சற்று விலகியதால் நயீமிற்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதன் பிறகு லிட்டலிட்டன் தாசை அவுட்டாக்கிய பிறகு இதே லகிரு குமாரா சற்று ஆவேசமாகவும் நடந்து கொண்டார். ஆடுகளத்தில் சிறிது நேரம் பதட்டம் நிலவிய நிலையில் இரண்டு வீரர்களும் பிரிந்து சென்றனர். உலக கோப்பை போன்ற உலகமே பார்க்கும் தொடரில் இது போல நடந்து கொண்டது இரண்டு நாட்டு ரசிகர்களுக்கும் சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. குமாரனின் இந்த செயலை வெளிப்படுத்தும் வீடியோ தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

லஹிரு குமார இந்த ஆட்டத்தில் இருபத்தி ஒன்பது ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இரண்டு அணிகளுமே தகுதிச்சுற்று விளையாடி இந்த சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ளது. அதனால் இரண்டு அணிகளுமே தங்களின் திறமையை நிரூபிக்க கடுமையாக போராடி வருகிறது. 172 என்ற இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு அசலங்கா மற்றும் ராஜபக்சே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று கொடுத்தார் . இந்த ஆட்டத்தில் இலங்கை அணிக்கு கிடைத்த வெற்றி மிகவும் உந்துசக்தியாக அந்த அணிக்கு இருக்கப் போகிறது.