ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் ; நீண்ட தூரம் ஓடி கடினமானக் கேட்சைப் பறந்துப் பிடித்த குல்தீப் யாதவ் – வீடியோ இணைப்பு

0
467
Kuldeep Yadav dive Catch

ஐ.பி.எல்-ல் டபுள் ஹெட்டர் போட்டி நாளான இன்று, முதல் போட்டியில் மும்பை ப்ரோபோர்ன் மைதானத்தில், கொல்கத்தா அணியும், டெல்லியும் அணியும் பலப்பரீட்சை நடத்தின!

முதலில் டாஸ் வென்ற, கொல்கத்தா கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்ய, டெல்லிக்கு ஓபனராக வந்த வார்னரும் பிரித்வியும் அட்டகாசமாக அரைசதமடித்து அசத்த, இருபது ஓவர்களின் முடிவில் டெல்லி 215 ரன்களை குவித்தது.

216 என்ற இலக்கை நோக்கி களம் புகுந்த கொல்கத்தாவுக்கு ஓபனர்கள் ஏமாற்ற, கேப்டன் ஸ்ரேயாஷ் அரைசதமடித்து நம்பிக்கைத் தந்தார். ஆனால் பின்பு வந்த யாரும் ஒத்துழைப்பு தராததால் 171 ரன்களுக்கு சுருண்டு கொல்கத்தா தோற்றது.

இதில் சுவாரசியமான விசயம் என்னவென்றால், கொல்கத்தா அணியிலிருந்து வெகுவாக பாதிக்கப்பட்டதாக, குல்தீப்பின் பயிற்சியாளர் கூறியிருக்க, இன்று டெல்லி அணிக்காக விளையாடிய குல்தீப் கொல்கத்தாவை பழித்தீர்க்கும் விதமாக திறமையைப் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆட்டத்தில் தனது கடைசி ஓவரை வீசிய குல்தீப் பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், உமேஷ் யாதவ் என மூவரையும் பெவிலியன் அனுப்பி அசத்திவிட்டார். இதில் உமேஷ் யாதவின் கேட்ச்சை,அவர் ஓடிச்சென்று எடுத்த விதம் வெறித்தனமாக இருந்தது. தற்போது அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்களுக்கான பர்பிள் கேப் குல்தீப் வசம் சென்றுள்ளது!