சிறுவயது நட்பு ஐபிஎல் தொடரை கடந்து தற்போது இந்திய அணியிலும் நீடிக்கிறது – கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் பேசிய வீடியோ இணைப்பு

0
124
KL Rahul and Mayank Agarwal

ஓபனிங் பேட்ஸ்மேன்கள் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் சிறுவயது முதல் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்கள். பெங்களூரில் பிறந்த இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே நல்ல நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெருங்கிய நண்பர்களான இவர்கள் டொமஸ்டிக் லெவல் ஆட்டங்களில் விளையாடி படிப்படியாக ஐபிஎல் தொடரிலும் ஒன்றாக விளையாடினார்கள்.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக இவர்கள் இருவரும் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக விளையாடியது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்பொழுது ஐபிஎல் தொடரை கடந்து இந்திய அணியிலும் இவர்கள் இருவரும் இணைந்து ஓபனிங் பேட்ஸ்மேன்களாக விளையாட போகின்றனர்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ராகுல் – மயங்க் ஜோடி

வருகிற இருவத்தி ஆறாம் தேதி இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்திய அணியின் ஆஸ்தான ஓபனிங் பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறினார். எனவே பிசிசிஐ இந்த டெஸ்ட் தொடர்களில் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வாலை ஓபனிங் பேட்ஸ்மேன்களாக விளையாட வைக்க முடிவு செய்துள்ளது.

கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் நட்பு பரிமாறிக்கொண்ட வீடியோ

பிசிசிஐ தற்பொழுது வெளியிட்ட வீடியோவில் இவர்கள் இருவரும் நட்பு பரிமாறிக் கொண்டனர். முதலில் கேஎல் ராகுல் தான் முதன் முதலாக பாக்ஸிங் டே ( டிசம்பர் 26ஆம் தேதி ) ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினேன். தற்பொழுது அதே பாக்ஸிங் டே அன்று உன் உடன் இணைந்து விளையாடுவது எனக்கு உற்சாகமாக இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் அனைத்து போட்டிகளிலும் மிகச்சிறந்த துவக்கத்தை கொடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு நாம் இருவரும் பயணிப்போம் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

அவர் பேசி முடித்ததும் மறுபக்கம் மயங்க் அகர்வால், இந்திய அணியில் உனக்கு பொறுப்பு அதிகமான காரணத்தினால் உன் தாடி முடிக்கள் சற்று நரைத்து உள்ளது. இவ்வாறு ஒரு கேள்வியை அவரிடம் எழுப்பினார். அதற்கு கே எல் ராகுல், ஆம் எனது தாடி முடிக்கள் நரைக்க தொடங்கியுள்ளது. ஆனால் இவை அனைத்தும் ஐபிஎல் தொடரின் கேப்டன் பணியை ஏற்றுக் கொண்டதிலிருந்து வந்தவை என்று கேஎல் ராகுல் கூறினார். அவர் கூறிய அடுத்த நொடியே மயங்க் அகர்வால் தன்னை அடக்க முடியாமல் சிரித்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -