பந்துவீசும் போது நடுவர் வயிற்றில் தாக்கிய கிரன் போல்லார்ட் – வீடியோ இணைப்பு

0
155
Kieron Pollard hits Umpire while bowling

2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 56வது போட்டியில், நவி மும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில், மும்பை அணியும், கொல்கத்தா அணியும் தற்போது மோதி வருகின்றன. இரண்டு அணிகளுக்குமே ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.

கொல்கத்தா அணி விளையாடிய பதினொரு போட்டிகளில், நான்கு போட்டிகளில் வென்று, எட்டுப் புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் ஒன்தாவது இடத்தில் இருக்கிறது. மும்பை அணி விளையாடிய பத்துப் போட்டிகளில் இரண்டு ஆட்டங்களில் வென்று, நான்கு புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் கடைசிப் பத்தாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்த முறை ரகானே, வெங்கடேஷ், பாட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி என பழைய கொல்கத்தா அணியை, பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் களமிறக்கி இருந்தார், மும்பை அணியில் காயத்தால் சூர்யகுமார் ஐ.பி.எல் தொடரை விட்டே வெளியேறி விட்டாதால், அவருக்குப் பதிலாக மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரமன்தீப்சிங்கிற்கு இடமளிக்கப்பட்டு இருக்கிறது.

முதலில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸை வென்று பந்துவிச்சை தேர்வுசெய்தார். கொல்கத்தா அணியின் பேட்டிங்கை துவங்க, துவக்க ஆட்டக்காரர்களாக வெங்கடேஷ் மற்றும் ரகானே களமிறங்கி, முதல் விக்கிட்டுக்கு 60 ரன்கள் என்று சிறந்த துவக்கத்தை அளித்தனர்.

இதைப் பயன்படுத்திக்கொண்டு நிதிஷ் ராணா சிறப்பாக விளையாட ஆரம்பித்தார். இதனால் கொல்கத்தா அணியின் ரன்ரேட் ஏறக்குறைய ஓவருக்கு பத்து ரன்களாக தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனால் நிதிஷ் ராணா, ரகானே ஜோடியை பிரிக்க, கேப்டன் ரோகித் ஷர்மா பொலார்ட்டை பந்துவீச்சில் களமிறக்கினார். பொலார்ட் ரகானேவிற்கு ஒரு பவுண்டரியை தர, அவரை நிதிஷ் ராணாவும் அடிக்க முயன்றார். பொலார்ட் நிதிஷ் ராணாவுக்குப் பந்து வீச ஓடிவர, நிதிஷ் ராணா பின்புறமாய் ரேம்ப் ஷாட் ஆட முயல, பொலார்டின் கையிலிருந்த பந்து தவறி பின்புறமாய் சென்று அம்பயரின் வயிற்றைத் தாக்கியது. உடனே பொலார்ட்டும், ரோகித் ஷர்மாவும் விசாரிக்க, அம்பயர் பிரச்சினையில்லை என்று தெரிவித்தார்!

- Advertisement -