ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாஸ்டர் பிளான் ! இங்கிலாந்து வீரர்களுக்கு திட்டம் போட்டு தந்த மெக்கல்லம் ; ஐயர் ஆட்டமிழந்தப் பின் சிக்னல் கொடுத்த ஜோ ரூட் – வீடியோ இணைப்பு

0
228
Brendon McCullum and Joe Root

இந்தியா, இங்கிலாந்துக்கு இடையிலான கடந்த ஆண்டு கைவிடப்பட்ட 5வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் போட ஸ்டோக்சும், முதல் முறையாக பும்ராவும் வந்தனர். அப்போது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கடந்த 3 டெஸ்டில் இங்கிலாந்து முதலில் பந்துவீசி, வெற்றியும் பெற்றது. இந்திய அணியின் தொடக்க வீரராக புஜாரா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய சுப்மான் கில் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 13 ரன்களில் வெளியேறினார்.இளம் வீரர் விஹாரி 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நட்சத்திர வீரர் விராட் கோலி 19 ரன்கள் எடுத்திருந்த போது பாட்ஸ் வீசிய பந்தில் கிளின் போல்ட் ஆனார். இதனையடுத்து களத்துக்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயர், நேர்மறையான உத்வேகத்துடன் கவுண்டர் அட்டாக் செய்தார். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த ஐயர், இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ரிஷப் பண்டுடன், ஒரு குட்டி பார்ட்னர்ஷிப் உருவான நிலையில், ஆண்டர்சன், அவரது இடுப்பை குறி வைத்து ஷாட் பால் வீச, அதனை பின்னால் அடிக்க ஸ்ரேயாஸ் ஐயர் முயன்ற போது, அது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. அப்போது ஜோ ரூட், பயிற்சியாளர் மெக்குல்லமை பார்த்து கையை உயர்த்தினார். அப்போதுதான் தெரியவந்தது, இந்த திட்டத்தை போட்டு கொடுத்ததே மெக்குல்லம் தான் . ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக மெக்குல்லமும், கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.