ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸ் அடித்து நீல் வாக்னரை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஜோ ரூட் – வீடியோ இணைப்பு

0
141
Joe Root hits reverse scoop six in wagner over

நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட்டிலும், நாட்டிங்ஹாம் டிரென்ட் பிரிட்ஜில் நடந்த இரண்டாவது டெஸ்டிலும் இங்கிலாந்து அணி அதிரடியாய் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி இருக்கிறது.

நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லமை, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பயிற்சியாளராகக் கொண்டுவந்ததில் இருந்து, டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி அணுகும் விதம் முற்றிலும் மாறி இருக்கிறது. ஆட்டத்தின் கடைசி ஐந்தாவது நாளில் 299 ரன்களை வெறும் ஐம்பது சேஸ் செய்து வெற்றிபெறும் அளவிற்குத் தற்போது இங்கிலாந்து அணியினர் ஆக்ரோசமாக விளையாடி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் தொடரின் கடைசி மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லி லீட்ஸ் மைதானத்தில் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் டாம் ப்ளூன்டலின் அரைசதம், டேரி மிட்ச்செல்லின் சதத்தோடு 329 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த போது, ஜானி பேர்ஸ்டோவும், அறிமுக வீரர் ஜேமி ஓவர்டனும் இணைந்து 241 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்து அணியை முன்னிலை பெற வைத்தனர். ஜேமி ஓவர்டன் 97 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 162 ரன்களையும் குவித்தனர். இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 360 ரன்களை சேர்த்தது.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி டாம் லாதம், டேரி மிட்ச்செல், டாம் ப்ளூன்டலின் அரைசதங்களால் 326 ரன்களை சேர்த்தது. இங்கிலாந்து அணிக்கு 296 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. நான்காம் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 113 ரன்கள் தேவை. ஒலி போப் 81 ரன்களோடும், ஜோ ரூட் 55 ரன்களோடும் களத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, நீல் வாக்னர் வீசிய ஆப் சைட் வெளியே செல்லுமாறு வீசிய, ஆட்டத்தின் 22வது ஓவரின் கடைசிப் பந்தை, ஜோ ரூட் ரிவர்ஸ்-ஸ்வீப் ஷாட்டில் சிக்ஸ் அடித்து அசத்தினார். இதைப் பார்த்த பவுலர் வாக்னருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மெக்கல்லம் பயிற்சியாளராய் வந்த பிறகு, ஜோ ரூட் கையிலிருந்து அதுவும் டெஸ்ட் மேட்ச்சில் ரிவர்ஸ்-ஸ்வீப் சிக்ஸரெல்லாம் வருகிறது!