நடுவராக மாறிய நியூசிலாந்து அணி ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் – வீடியோ இணைப்பு

0
832
Jimmy Neesham Umpiring in Charity Match

தற்போதைய கிரிக்கெட் உலகின் மிக முக்கியமான அணிகளுள் ஒன்று நியூசிலாந்து. அந்த அணியின் முன்னாள் கேப்டன் மெக்கல்லம் அணிக்கு தலைமை தாங்க துவங்கியதிலிருந்து அந்த அணி சர்வதேச அரங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த இரண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களிலும் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அதேபோல கடந்த ஆண்டு நடந்த முடிந்த t20 உலகக் கோப்பை தொடரிலும் நியூசிலாந்து இறுதிப் போட்டியில் விளையாடியது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அதோடு நின்றுவிடாமல் கடந்த ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து. வில்லியம்சன் டெய்லர் போன்ற அணியின் மூத்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியை தற்போது வெற்றிப்பாதைக்கு அதிகமாக அழைத்து வருகின்றனர். இவர்களுடன் இன்னொரு முக்கியமான வீரர் ஜிம்மி நிமிஷம். அந்த அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் என இரண்டு முக்கியமான பார்மட்களில் விளையாடி வருபவர்.

- Advertisement -

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி அணி இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றவர் இவர் தான். கிரிக்கெட் களத்தோடு நின்றுவிடாமல் சமூக வலைதளங்களிலும் நகைச்சுவையான பதிவுகளை இட்டு அதிகமான ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார் நீஷம்.

தொடர்ந்து ஏதாவது செய்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் நீஷம் தற்போது நியூசிலாந்தில் நடந்த ஒரு ஆட்டத்திற்கு நடுவராக பணியாற்றி உள்ளார். தொண்டுக்காக நடத்தப்படும் இந்த ஆட்டத்தில் பல முன்னாள் முன்னணி நியூசிலாந்து வீரர்கள் பங்கேற்றனர். அதில் ஜிம்மி நீஷம் நடுவராக பணியாற்றிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஆல்ரவுண்டர் என்றால் எல்லா வேலையும் பார்க்கத்தான் வேண்டும் என்று பலரும் நகைச்சுவையாக இதை பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பஞ்சாப் பணியிலும் கடந்த 2021 ஆம் ஆண்டு மும்பை அணிக்கும் விளையாடிய ஜிம்மி நீசம் இந்த முறையும் ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -