39 வயதிலும் பந்தை தடுக்க சிறுத்தையை போல் தாவிய ஜேம்ஸ் ஆண்டர்சன் – வைரலாகி வரும் வீடியோ உள் இணைப்பு

0
645
James Anderson Dive Catch Attempt

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ள நிலையில், இந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இங்கிலாந்து அணியால் முதல் இன்னிங்ஸ் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் மாத்திரம் அதிகபட்சமாக 50 ரன்கள் குவித்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லியோன் இருவரும் இணைந்து தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினர்.

சிறுத்தையை போல் தாவிய ஜேம்ஸ் ஆன்டர்சன்

ஆஸ்திரேலிய அணி தற்பொழுது முதல் இன்னிங்ஸில் விளையாடி கொண்டு வருகிறது. 87 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 261 ரன்கள் குவித்து முன்னிலையில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் மார்க்கஸ் ஹாரிஸ் அதிகபட்சமாக 76 ரன்கள் குவித்துள்ளார்.

82வது ஓவரின் 4-வது பந்தை மார்க் வுட் வீசிய போது, அதை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுண்டரிக்கு விளாசினார். மின்னல் வேகத்தில் சென்ற அந்த பந்தை இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் திடீரென சிறுத்தையை போல் தாவி தடுத்தார். அந்த பந்தை பிடிக்க முயற்சிக்க, தன்னால் முடிந்தவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் தாவிய காட்சி ரசிகர்கள் அனைவரையும் தற்போது ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அந்த பந்தை அவரால் பிடிக்க முடியவில்லை என்றாலும், பவுண்டரிக்கு செல்ல வேண்டிய அந்த பந்தை வெறும் ஒரு ரன்னில் கட்டுப்படுத்தி விட்டார். 39 வயதான அவர் இவ்வளவு துள்ளியமாக தாவிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னிலை வகித்து வரும் ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய அணி தற்போது 76 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் மீண்டும் இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்று, 3-0 என்கிற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிவிடும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.