வீடியோ: உருண்டு புரண்டு மரண சிக்ஸ் அடித்த காட்டடி சூரியகுமார்.. தரமான சம்பவத்தின் வீடியோ!

0
799

3வது டி20ல் சதமடித்துள்ள சூரியகுமாரின் சிக்ஸர் அடித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.

துவக்க வீரர்கள் இஷான் கிஷன் 1 ரன்னுக்கும் சுப்மன் கில் 36 பந்துகளில் 46 ரன்களுக்கும் அவுட் ஆகினார். இதில் கில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

3வதாக உள்ளே வந்த ராகுல் திரிப்பாதி வெறும் 16 பந்துக்கு 35 ரன்கள் அடித்த நல்ல அதிரடியான ஆட்டத்தை செட் செய்துவிட்டு ஆட்டமிழக்க, அதை அப்படியே பிடித்துக்கொண்டு நமது மிஸ்டர் 360 சூரியகுமார் யாதவ், வழக்கம்போல வானவேடிக்கை காட்டத்துவங்கினார்.

அரைசதம் கடந்த சூரியகுமார், கியரை மாற்றி இன்னும் அதிரடியாக ஆடி, டி20 போட்டிகளில் தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார். 5 விக்கெட் போனபிறகு உள்ளே வந்த அக்சர் பட்டேல் 9 பந்துகளில் 21 ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் ரோல் விளையாடினார். சூரியகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்கள் விளாசி இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார்.

360 டிகிரி ஆட்டத்திற்கு பெயர்போன சூரியகுமார், இப்போட்டியில் அடித்த சிக்ஸ், பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அந்த சிக்சரின் வீடியோவை இங்கே காண்போம்.

வீடியோ: