அவுட் தராததால் அம்பயரின் கையை உயர்த்த வைத்து அவுட் கேட்ட ஹாசன் அலி – வீடியோ இணைப்பு

0
196
Hasan ali raising umpire finger

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானிற்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியது, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான விசயமாக இருக்கிறது. பெரிய அணியோடு சில வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி உள்நாட்டில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது.

தற்போது பாகிஸ்தான் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது. ஜூலை 16ஆம் தேதி இலங்கை செல்லும் பாகிஸ்தான் அணி, ஜூலை 24ஆம் தேதி முதல் போட்டியில் விளையாட இருக்கிறது!

- Advertisement -

தற்போது இலங்கைச் சுற்றுப்பயண டெஸ்ட் தொடருக்கான பயிற்சி போட்டியில் பாகிஸ்தான்அணி உள்நாட்டில் விளையாடி வருகிறது. இதில் சல்மான் அலி ஆஃகாவிற்கு ஹசன் அலி பந்துவீசி விட்டு அம்பயரிடம் நகைச்சுவையாக செய்த செயல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது!

பாகிஸ்தான் வீரர் சல்மான் அலி ஆஃகாவிற்கு ஹசன் அலி ஃபுல் லென்த் பந்து ஒன்றை வீச, அதை அவர் தவறவிட்டு கால் காப்பில் வாங்கினார், இதனால் உறுதியாக அவுட் என்று நம்பிய பந்துவீச்சாளர் ஹசன்அலி அம்பயரிடம் உறுதியாக முறையிட்டார். ஆனால் அம்பயர் அவருக்கு அவுட் தர மறுத்துவிட்டார். இதற்குப் பிறகு ஹசன் அலி வேடிக்கையாக அம்பயரின் விரல்களைப் பிடித்து அவுட் என்று அறிவிக்குமாறு செய்ய, அது மைதானத்தில் சிரிப்பை உண்டாக்கியது!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வாளய் வாசிம் அணி தேர்வு பற்றி கூறுகையில் “லெக் ஸ்பின்னர் யாஷிர் ஷா அணிக்குத் திரும்பியிருப்பது பாகிஸ்தான் சுழல் துறையை வலுப்படுத்தி இருக்கிறது. அவர் கடந்த இலங்கை தொடரில் தன்னை ஒரு மேட்ச் ஒரு வின்னர் என்று நிரூபித்து இருக்கிறார். மேலும் சஜித் கான் இருக்கிறார். இதில்லாமல் இரண்டு ஸ்பின் ஆல்ரவுண்டர்களாக மொகம்மத் நவாஸ் மற்றும் சல்மான் அலி ஆஃகா உள்ளார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நியூசிலாந்து கடந்த ஆண்டு பாகிஸ்தானிற்கு வந்து பாதுகாப்பை காரணம் காட்டி தொடரை விளையாடமல் இரத்து செய்துவிட்டு வெளியேறியபோது, மொத்த பாகிஸ்தான் கிரிக்கெட்டும் கிளர்ந்தெழுந்து, அடுத்து நடந்த டி20 உலகக்கோப்பையில் தங்களை நிரூபிக்கவும், அடுத்து ஆஸ்திரேலியா அணி இந்த ஆண்டில் பாகிஸ்தானிற்குச் சுற்றுப்பயணம் செய்யவும், பாகிஸ்தான் கிரிக்கெட் மீண்டும் வேகம் எடுத்து உள்ளது!