ஹர்ஷல் பட்டேல் & ரியான் பராக் இடையே மோதல் ; போட்டி முடிந்த பின்பும் கைக் குலுக்காமல் சென்ற ஹர்ஷல் பட்டேல் – வீடியோ இணைப்பு

0
1607
Harshal Patel and Riyan Parag

ஐ.பி.எல் பதினைந்தாவது சீஸனின் 39வது ஆட்டம், சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் அணிக்கும், பாஃப்பின் பெங்களூர் அணிக்கும் இடையே, மகாராஷ்ட்ராவின் புனே மைதானத்தில் தற்போது நடந்து வருகிறது. ஆட்டத்தில் பனிப்பொழிவு பிரச்சினை பெரிதாய் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது!

முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் பாஃப் பந்துவீச்சை செய்தார். பெங்களூர் அணிதரப்பில் அனுஜ் ராவத்திற்குப் பதிலாய் பட்டிதார் உள்ளே வந்திருந்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் கருண்நாயர் மெக்காய்க்கு பதிலாக குல்தீப் சென், டேரி மிட்ச்செல் உள்ளே வந்திருந்தனர்.

- Advertisement -

ராஜஸ்தான் அணிக்குத் துவக்கம் தர வந்த படிக்கல் ஏமாற்ற, ஆச்சரியமாய் மீண்டும் அஷ்வின் நம்பர் 3ல் வந்தாலும், அதற்கடுத்து அஷ்வின், பட்லர், சாம்சன், டேரி மிட்ச்செல், ஹெட்மயர் என யாருமே நிலைக்கவில்லை. ராஜஸ்தான் அணியில் நான்கு டெய்ல் என்ட்டர்ஸ் என்பதால், ஆறு விக்கெட் விழுந்ததுமே டிரெண்ட் போல்ட் ஆடவேண்டிய நிலை வந்துவிட்டது.

ஆனால் ரியான் பராக் ஒருமுனையில் நின்று பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு சிறப்பான தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்தார். ஹர்சல் படேலின் இருபதாவது ஓவரை முழுமையாக விளையாடிய அவர், அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகளோடு 18 ரன்களை விளாசியதோடு, அரைசதத்தையும் அடித்து 31 பந்துகளில் 56 ரன்களை குவித்திருந்தார். ஹர்சலின் கடைசி ஓவர் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்துவிட்டு ரியான் பராக் வெளியேற, ஹர்சல் படேலுக்கும் அவருக்கும் இடையே ஒரு வாய்த்தகராறு போன்று ஒன்று நிகழ்ந்தது. பெங்களூர் அணியின் இன்னிங்ஸ் முடிந்த போது, ரியான் பராக் ஹர்சலிடம் கைக்குலுக்கப் போக, ஹர்சல் கைக்குலுக்காமல் கடந்து போய்விட்டார். ஆனால் இதெல்லாம் எதனாலென்று சரியாய் தெரியவில்லை!