கேட்சைத் தவற விட்டதால் அனைவர் எதிரிலும் வைத்து குலாமின் கன்னத்தில் அறைந்த ஹாரிஸ் ரவுப் – வீடியோ இணைப்பு

0
134
Haris Rauf Slaps Kamran Ghulam

2022 ஆம் ஆண்டிற்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் கடைசி போட்டியில் லாகூர் மற்றும் பெஷாவர் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பெஷாவர் அணி பேட்டிங் செய்தது. 2வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் வீச வந்தார். அப்போது ஹஸ்ரதுல்லா ஜசாயின் கேட்ச்சை லாகூர் வீரர் கம்ரன் குலாம் தவற விட்டார். அதற்கு பின் மூன்று பந்துகள் கழித்து முஹம்மது ஹாரிஸின் விக்கெட்டை ஹாரிஸ் ரவுப் எடுத்தார்.

விக்கெட்டைக் கொண்டாட சகவீரர்கள் ஒன்றுகூடிய போது அனைவர் முன்னிலையிலும் கம்ரன் குலாமை கன்னத்தில் அறைந்தார். ஹாரிஸ் ரவுப்பின் இச்செயல் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. பின்னர் முதல் இன்னிங்சின் முடிவில் வஹாப் ரியாசை ரன் அவுட் செய்த குலாமை பாசத்தோடு கட்டிப்பிடித்து அனுப்பினார் ஹாரிஸ் ரவுப்.

- Advertisement -

சூப்பர் ஓவரில் முடிந்த போட்டி

முதலில் பேட் செய்த பெஷாவர் அணி, பவர்பிளே முடிவில் 51 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து சற்று தடுமாறியது. அடுத்து ஜோடி சேர்ந்த சோயப் மாலிக் – ஹைதர் அலி அணியை சரிவில் இருந்து மீட்டனர். மாலிக் 32 ரன்களிலும் ஹைதர் அலி 25 ரன்களிலும் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் 158/7 என முடித்தது.

அதைத் தொடர்ந்த லாகூர் அணிக்காக பக்கர் ஜமான் மற்றும் பிலிப் சால்ட் களமிறங்கினர். தொடக்கத்திலேயே அவர்களுக்கு அதிர்ச்சி. முதல் பந்திலேயே பக்கர் ஜமான் விக்கெட்டை பறிகொடுத்து டக் ஆகி வெளியேறினார். சால்ட் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிய மறுபக்கம் ஹபீஸ் தனியாளாக அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல போராடினார். ஆனால் 49 ரன்களில் அவர் ஆட்டாமிழக்க போட்டி பெஷாவர் கைக்கு சென்றது.

கடைசி நேரத்தில் திடீரென ஓர் டிவிஸ்ட். வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி பவுண்ட்ரியும் சிக்ஸரும் பறக்க விட்டார். ஒரு பந்தில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் இமாலய சிக்ஸர் அடித்து அசத்தினார். 20 பந்தில் அவர் சேர்த்த 39 ரன்கள் மூலம் லாகூர் அணி இப்போட்டியை சமன் செய்தது.

- Advertisement -

பெஷாவர் அணிக்காக வஹாப் ரியாஸ் சூப்பர் ஓவரை வீச வந்தார். அபாரமாக பந்துவீசி வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை 2 பந்தில் 2 பவுண்டரி விளாசி சோயப் மாலிக் முடித்தார். ஷாஹீன் அப்ரிடியின் அதிரடி பயனில்லாமல் சென்றது.