ஹர்திக் பாண்டியா ஹெல்மெட்டில் இடிபோல இடித்த பந்து ; உம்ரன் மாலிக் வேகத்தில் அசந்துபோன பாண்டியா – வீடியோ இணைப்பு

0
286
Umran Malik bouncer hits Hardik Pandya

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் விளையாடியுள்ளார் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்துள்ளது. குஜராத் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 42 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 50* ரன்களுடன் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் புவனேஸ்வர் குமார் மற்றும் தங்கராசு நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

- Advertisement -
ஹர்திக் பாண்டியாவின் ஹெல்மெட்டில் இடித்த பந்து

ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் தன்னுடைய இரண்டாவது ஓவரை ஹர்திக் பாண்டியாவிற்க்கு எதிராக வீசினார்.அவர் வீசும் பந்து பொதுவாகவே 140 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் இருக்கும். அவ்வப்போது ஒரு சில பந்துகளை அவர் 150 கிலோ மீட்டர் வேகத்தில் கூட விசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்.

அதேபோல இன்று ஆட்டத்தில் எட்டாவது ஓவரில் ( உம்ரான் மாலிக்கின் இரண்டாவது ஓவர் ) முதல் பந்தை அதிவேகத்தில் வீசினார். அவர் வீசிய அந்த பவுன்சர் பந்து ஹர்திக் பாண்டியாவின் ஹெல்மெட்டில் பலமாக இடித்தது. உடனடியாக குஜராத் அணியின் மருத்துவ குழு ஹர்திக் பாண்டியா பரிசோதனை செய்து வேறு ஹெல்மட்டை அவருக்கு கொடுத்தனர்.உம்ரான் மாலிக் வீசிய அந்த பவுன்சர் பந்தை குறித்து சமூக வளைதளத்தில் தற்போது ரசிகர்கள் பரவலாக விவாதித்து வருகின்றனர்.

பின்னர் அதற்கு அடுத்த இரண்டு பந்துகளையும் ஹர்திக் பாண்டியா பந்து வந்த வேகத்தில் பவுண்டரி லைனுக்கு விரட்டினார். ஹர்திக் பாண்டியா அவ்வாறு அதிரடியாக அடுத்த இரண்டு பவுண்டரி குறித்தும் ரசிகர்கள் வெகுவாக சமூகவலைதளத்தில் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -