வெறும் 8 பந்தில் ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட மொத்தம் 30 ரன்கள் விளாசித் தள்ளிய பினிஷர் தினேஷ் கார்த்திக் – வீடியோ இணைப்பு

0
2662
Dinesh Karthik 30 off 8

ப்ளே ஆப் சுற்றுக்கு போட்டி போட்டுக் கொள்ளும் இரண்டு அணிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான தற்போது சற்று முன்னால் நடந்து முடிந்தது. போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. விராட் கோலி டக் அவுட் ஆக மறுபக்கம் கேப்டன் ஃபேப் டு பிளேசிஸ் அதிகபட்சமாக 50 பந்துகளில் 73* ரங்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

குறிப்பாக கடைசி நேரத்தில் களமிறங்கிய ஃபினிஷர் தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 30* ரன்களுடன் மைதானத்தில் சூறாவளியை வர வைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கடைசி ஓவரில் ஹைதராபாத் அணியை திக்குமுக்காட வைத்த தினேஷ்

தினேஷ் கார்த்திக் ஆட்டத்தின் 19வது ஓவரில் களமிறங்கினார். அந்த ஓவரில் கடைசி 4 பந்துகளை பிடித்து அதில் ஒரு டபுள்ஸ் மற்றுமொரு சிக்சர் என 8 ரன்கள் மட்டுமே குவித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் மீண்டும் கடைசி 4 பந்துகளை தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார்.

கடைசி ஓவரை ஃபசல்ஹக் ஃபரூக்கி வீசினார். கடைசி 4 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி என 22 ரன்கள் குவித்து ஹைதராபாத் அணியை தினேஷ் கார்த்திக் திக்குமுக்காட வைத்தார். மொத்தமாக 8 பந்துகளில் 30* ரன்கள் குவித்து, பெங்களூர் அணியை 192 ரன்கள் குவிக்க வைத்தார்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடாமல் போயிருந்தால் நிச்சயமாக பெங்களூரு அணி 150 அல்லது 160 ரன்களுக்கு ஆட்டத்தை முடித்து இருக்கும். தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டம் பெங்களூர் அணியின் ஸ்கோரை எகிற வைத்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் இவரது அதிரடி ஆட்டம் பெங்களூரு அணியை வெற்றி பெற வைத்ததுருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் விளையாடிய ஐதராபாத் அணி 125 ரன்களுக்கு ஆட்டம் இழக்க 67 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் தற்பொழுது 14 புள்ளிகளுடன் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.