விராட் கோலி பற்றி தவறாக வார்த்தையை விட்டு சிக்கிய சேவாக் ! குவியும் கண்டனங்கள் – வீடியோ இணைப்பு

0
61
Virat Kohli and Virender Sehwag

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் ஆட்டத்திற்குள் நிலவும் பரபரப்புகளைத் தாண்டி சில விசயங்கள் இணையவாசிகளால் பெரிதாய் பேசப்பட்டு வருகிறது. அதன் மூல விசயமாய் விராட் கோலி இருக்கிறார் என்பது இன்னும் இணையத்தில் தீவிரமாய் பரவ காரணமாய் அமைகிறது!

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ஆரம்பத்தில் 98 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டு இழந்து பெரிய நெருக்கடியில் விழுந்தது. அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா இருவரும் சதமடித்து 222 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கொண்டு வந்ததால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தனது முதல் இன்னிங்ஸில் விராட்கோலி, மேத்யூ போட்ஸ் வெளியில் வீசிய பந்தை ஆடுவதாய் வேண்டாமா என்ற குழப்பத்தில் கடைசியில் இன்-ஸைட் எட்ஜால் போல்டாகி வெளியேற, இது இரசிகர்களால் இணையத்தில் விமர்சனம் ஆனது.

அடுத்து இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டு இருக்க, விராட் கோலி ஜானி பேர்ஸ்டோவை ஸ்லெட்ஜிங் செய்ய, அதற்குப் பிறகு எழுந்த பேர்ஸ்டோ 150 ஸ்ட்ரைக்ரேட்டில் இந்திய பந்து வீச்சை நொறுக்கி சதமடித்து வெளியேறினார். இதுவும் முன்னாள் வீரர்கள் முதல் இரசிகர்கள் வரை பெரியளவில் நகைச்சுவையாய் இணையத்தில் பகிரப்பட்டது.

குறிப்பாய் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விராட் கோலி தேவையில்லாமல் ஜானி பேர்ஸ்டோவை சீண்டி, புஜாரா போல் ஆடியவரை ரிஷாப் பண்ட் போல் ஆடவைத்து விட்டார் என்று ட்வீட் செய்ய, அது இணையத்தில் கிரிக்கெட் வட்டாரத்தில் வைரல் ஆனது.

இப்பொழுது வித்தியாசமாய் விராட் கோலியின் ஒரு விசயத்தில் வீரேந்திர சேவாக் பெரிய கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறார். என்னவென்றால்; இந்தியா இங்கிலாந்து போட்டியின் போது, தொலைக்காட்சியில் இந்தி வர்ணனையில் இருந்த வீரேந்திர சேவாக், சிராஜ் பந்தில் ஸ்டூவர்ட் பிராட் விக்கெட்டை இழக்க, அதற்கு விராட் கோலி நடனமாடி கொண்டாட, “சாமியா” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விராட்கோலியின் செயலைப் பற்றிப் பேசிவிட்டார். இது இந்தியில் கேலி செய்வதற்கான ஒரு கெட்ட வார்த்தை ஆகும். இதைக் கேட்ட கிரிக்கெட் இரசிக இணையவாசிகள் சேவாக்கிற்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்வதோடு, சேவாக்கை பணியிலிருந்து நீக்கவேண்டும் என்று ஆக்ரோசமாய் தெரிவித்து வருகிறார்கள்!