கிரிக்கெட்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்டில் பரபரப்பு ! மைதானத்துக்குள் நுழைந்த பார்வையாளர் ; விரட்டியத்த போலீஸ் – வீடியோ இணைப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் 89 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தின் 102 ஆண்டுகள் வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ரிஷப் பண்ட் 111 பந்துகளில் 146 ரன்கள் விளாசினார். இதில் 19 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். ஜடேஜா வும் அபாரமாக விளையாடி 83 ரன்களில் ஆட்டமிழக்காமல் நின்றார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

முதல் நாள் ஆட்டத்துக்கு பிறகு பேசிய ரிஷப் பண்ட், தாம் யார் பந்துவீசுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்துவதை விட, அவர் பந்தை எப்படி வீசுகிறார் என்பதை தான் கவனித்து விளையாடுவேன் என்று கூறினார். எந்த பந்துவீச்சாளர்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு அடிப்பது இல்லை என்று குறிப்பிட்ட ரிஷப் பண்ட், பந்தை அடிக்க முடியும் என்று தோன்றினால் அடித்துவிடுவேன் என்று தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த ஆண்டை போலவே இம்முறையும் மைதானத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் ரோகித் சர்மாவின் பெரிய இன்னிங்சை கூட யாரேனும் மறந்து இருப்பார்கள், ஆனால் ஜார்வோ என்ற ரசிகரை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். இந்திய அணியின் 12வது வீரர் நான் தான் என்று கூறி, வெள்ளை ஜெர்சியை அணிந்து கொண்டு கடந்த ஆண்டு விளையாட வந்தார்.

ஒரு முறை பேட்டிங்கும், இன்னொரு முறை பவுலிங்கும் செய்ய வந்த அவரை போலீசார் தூக்கி சென்றனர். தற்போது மீண்டும் ஒரு முறை அதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்ததும், வெள்ளை நிற ஜெர்சியை அணிந்து கொண்டு மைதானத்துக்கு வந்தார். அப்போது, மைதான பாதுகவாலர்கள், போலீசார் உடனே அந்த நபரை இழுத்து சென்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கொரோனா பரவல் அதிகம் இருக்கும் நிலையில், இது போன்ற சம்பவம் இங்கிலாந்தில் தொடர்ந்து நடைபெறுவது வீரர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாகி விட்டது.

- Advertisement -
Published by