பேட்ஸ்மேனைச் சுற்றி 11 வீரர்கள் ; கடைசி ஓவரில் 1 விக்கெட் தேவை ; கடைசி நிமிடத்தில் போராடி போட்டியை சமன் செய்த இங்கிலாந்து – வீடியோ இணைப்பு

0
3729
4th Ashes Test Draw

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி சில நிமிடங்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. கடைசி நாள் ஆட்டமான இன்று அந்த அணி வெற்றி பெற 352 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டத்தை காலையில் தொடங்கியது. இன்று முழுவதும் மொத்தமாக 91 ஓவர்கள் பிடித்து அந்த அணி இறுதி விக்கெட்டை இழக்காமல் போட்டியை சமன் செய்துள்ளது.

நேற்று நான்காம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 11 ஓவர் முடிவில் 30 ரன்கள் குவித்து எந்தவித விக்கெட்டையும் இழக்காமல் நல்ல நிலையில் இருந்தது. நல்ல நிலையில் இருந்த அந்த அணி இன்றைய ஆட்டத்தில் முதல் 30 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் அடுத்த 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களை சுற்றிவளைத்து ஆஸ்திரேலியா வீரர்கள்

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 91.2 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் மட்டும் எடுத்து இருந்தது. குறிப்பாக ஆட்டத்தின் கடைசி 6 ஓவர்கள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவரும் பிட்ச்சை சுற்றி வளைத்து இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். ஸ்லிப், கல்லி, கவர், ஷார்ட் கவர், மிட் ஆன் மற்றும் மிட் ஆஃப் என ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த 9 பேரும் அவர்களை சுற்றி வளைத்தனர்.

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லியோன் பந்து வீச்சை சமாளித்த இங்கிலாந்து

ஒரு கட்டத்தில் 9 ஆவது விக்கெட்டுக்கு ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜாக் லீச் இருவரும் இணைந்து போட்டியை சமன்செய்ய போராடிக் கொண்டிருந்தனர். கடைசி 4 ஓவர்களை ஸ்டீவ் ஸ்மித் மற்றும் நாதன் லியோன் இருவரும் மாறி மாறி வீசினர். ஆட்டத்தின் 100 வது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் வீசிய கடைசி பந்தில் ஜாக் லீச் அவுட் ஆகினார்.

இறுதி நிமிடங்களில் இரண்டு ஓவர் மட்டுமே மீதம் உள்ள நிலையில், 10 வது விக்கெட்டுக்கு ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஜோடி இணைந்து விளையாட தொடங்கியது. நாதன் லியோன் வீசிய 101வது ஓவரை முழுவதுமாக தாக்குப்பிடித்து ஸ்டூவர்ட் பிராட் தனது விக்கெட்டை இழக்காமல் தப்பித்தார். கடைசி ஓவரின் போது ரசிகர்களைப் போல ஸ்டோக்க்ஸ் மிகவும பதட்டமாக காணப்பட்டார்.

- Advertisement -

அதேபோல ஸ்டீவ் ஸ்மித் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவர் ஆன 102வது ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் சாமர்த்தியமாக தாக்கு பிடித்து தனது விக்கெட்டை இழக்காமல், இறுதியில் இங்கிலாந்து அணி போட்டியை சமன் செய்ய வைக்க உதவினார்.

ஒயிட் வாஷ் ஆகாமல் தப்பித்துக் கொண்ட இங்கிலாந்து அணி

இதன் மூலமாக இங்கிலாந்து அணி 4ஆவது டெஸ்ட் போட்டியின் தோல்வியின் விளிம்பில் இருந்து தப்பித்துக் கொண்டு, போட்டியை கௌரவமாக சமன் செய்துள்ளது. ஒருவேளை அந்த அணி இன்றைய போட்டியில் தோல்வி அடைந்திருந்தால், 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அந்த அணி நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்து 0 – 4 என்கிற நிலையில் பரிதாபமாக காட்சி அளித்து இருக்கும்.

அதுமட்டுமின்றி ஒருவேளை கடைசி டெஸ்ட் போட்டியிலும் அந்த அணி தோல்வியடைந்திருந்தால், 0 – 5 என்கிற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்திருக்கும். அந்த வாய்ப்பை இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணிக்கு ஏற்படுத்திக் கொடுக்காமல், 4ஆவது டெஸ்ட் போட்டியை அந்த அணி சமன் செய்துள்ளதால் இங்கிலாந்து ரசிகர்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.