முஷ்டாபிசுர் வீசிய ஓவரில் 28 ரன்கள் விளாசி ருத்ரதாண்டவ ஆட்டம் ஆடிய தினேஷ் கார்த்திக் – வீடியோ இணைப்பு

0
1884
Dinesh Karthik RCB

ஐ.பி.எல்-ல் டபுள் ஹெட்டர் போட்டி நாளான இன்று, இரண்டாவது போட்டியில் மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில், பாஃப் தலைமையேற்றிருக்கும் பெங்களுர் அணியும், ரிஷாப் தலைமையேற்று இருக்கும் டெல்லி அணியும் மோதி வருகின்றன.

முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷாப் பந்துவீச்சை தேர்வு செய்ய, பெங்களூர் அணி தரப்பில் வரிசையாக கேப்டன் பாஃப், அனுஜ், விராட்கோலி, பிரபுதேசாய் ஆகியோர் ஏமாற்றினார்கள். இருந்தாலும் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் மிகச்சிறப்பாக விளையாடி அரைசதமடித்து ஆட்டமிழந்தார்.

ஆனாலும் அவர் ஆட்டமிழந்த பொழுது அணியின் ஸ்கோர் 11.2 ஓவர்களில் 92 ரன்களே. பெங்களுர் அணி ஏறக்குறைய தன் முக்கிய வீரர்கள் அனைவரையும் இழந்து தவித்திருக்க, வழக்கம்போல் வந்தார் தினேஷ் கார்த்திக். அவருக்கு பக்கபலமாக நின்றார் இளம் வீரர் ஷாபாஸ் அகமத்.

17 ஓவர்களில் அணியின் ஸ்கோரை 132 என்று இந்த ஜோடி தள்ளிக்கொண்டு வர, 18-வது ஓவரை வீசவந்தார் முஸ்தாபிஜூர் ரகுமான். தினேஷ் கார்த்திக் அவருக்காகவே காத்திருந்தது போல 4, 4 , 4, 6, 4, 6 என்று வரிசையாக பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக வெளுத்து 28 ரன்களை குவித்துவிட்டார். இந்தத் தொடரில் ஆறு போட்டிகளாக தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் நம்ப முடியாததாகச் சிறப்பாக இருக்கிறது!