பந்தை ஸ்டேயத்தை விட்டு வெளியே பறக்க விட்ட சண்டிமால் ; ரோட்டில் விழுந்த பந்தை தூக்கிப் போட்ட சிறுவன் – வீடியோ இணைப்பு

0
466
Dinesh Chandimal out of the stadium six

ஆஸ்திரேலிய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டி தொடர்களிலும் பங்கேற்க இலங்கை நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் முதலில் டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. இதற்கு அடுத்து நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை ஆஸ்திரேலிய அணி வென்றது!

இந்த நிலையில் காலே மைதானத்தில் தொடர் யாருக்கென்று நிர்ணயிக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கி நடந்தது வந்தது. இந்தப் போட்டியில் முதலில் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்யும் என அறிவித்தார்.

- Advertisement -

இதன்படி முதலில் பேட் செய்ய களமிறங்கிய டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா இருவரும் வெளியேற, மார்னஸ் லபுசேன் 104, ஸ்டீவன் ஸ்மித் 145 இருவரும் சதமடிக்க, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் குவித்தது.

இதற்கடுத்து களமிறங்கிய இலங்கை அணி பேட்டிங்கில் ஆஸ்திரேலிய அணிக்குப் பதிலடி தந்தது. திமுத் கருணரத்ன 86, குஷால் மென்டிஸ் 85, ஆஞ்சலோ மேத்யூஸ் 52 என மூவரும் அரைசதமடிக்க, ஐந்தாவது வீரராக களமிறங்கிய தினேஷ் சன்டிமால் 206* ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 16 பவுன்டரிகளையும், 5 சிக்ஸர்களும் அடக்கம். ஆட்டத்தில் தினேஷ் சன்டிமால் 189 ரன்கள் எடுத்திருந்த போது, மிட்ச்செல் ஸ்டார்க் வீசிய பந்தை மிட்-ஆன் திசையில் திசையில் தூக்கியடித்தார். அது இமாலய சிக்ஸரா மாறி, பந்து மைதானத்தை விட்டு சாலையில் போய் விழுந்தது. சாலையில் சென்ற இளைஞர் பந்தை எடுத்து மைதானத்திற்குள் வீசினார். இந்த இமாலய சிக்ஸர் மூலம் 195 ரன்னிற்கு வந்த தினேஷ் சன்டிமால் மிட்ச்செல் ஸ்டார்க் ஓவரில் இன்னொரு சிக்ஸரை விரட்டி தனது இரட்சை சதத்தைப் பதிவு செய்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 554 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 190 ரன்கள் பின்தங்கிய ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் மளமளவென்று சரிந்து 41 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 1-1 என சமன் செய்தது. இரண்டு இன்னிங்சிலும் தலா ஆறு விக்கெட்டுகள என 12 விக்கெட்டுகளை விழ்த்திய அறிமுக சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா ஆட்டநாயகன் விருது பெற்றார். இரட்டை சதமடித்த தினேஷ் சன்டிமால் தொடர் நாயகன் விருது பெற்றார்.

- Advertisement -