கிரிக்கெட்

ஆட்டத்தின் இடையே நடந்த குளறுபடி மாறி மாறி ஓடி ஒரு வழியாக தப்பித்து கொண்ட இந்திய மகளிர் அணி வீரர் தீப்தி ஷர்மா – வீடியோ இணைப்பு

இந்திய மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான ஒரு டி20 போட்டி கொண்ட தொடர் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. போட்டியின் முடிவில் நியூசிலாந்து மகளிர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

- Advertisement -

டி20 போட்டியை தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இந்த இரு அணிகளுக்கு இடையே இன்று ஆரம்பமாகியது. முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 10 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய இந்திய மகளிர் அணி 10 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் மட்டுமே குவித்த காரணத்தினால், நியூசிலாந்து மகளிர் அணி இந்திய மகளிர் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணியின் ஓபனிங் வீரர் சுசி பேட்ஸ் நூத்தி 111 பந்துகளில் 106 ரன்கள் குவித்து அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அதேசமயம் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெஸ் கெர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

ஆட்டத்தின் இடையே நடந்த கலகலப்பு சம்பவம்

இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபொழுது 43-வது ஓவரில் ஒரு கலகலப்பான சம்பவம் நடைபெற்றது. அந்த ஓவரை ஜெஸ் கெர் வீசினார். அப்பொழுது இந்திய மகளிர் அணியில் பூஜா வாட்ரெக்கர் மற்றும் தீப்தி ஷர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்தனர்.

அந்த ஓவரின் 3வது பந்தை மேற்கொண்ட பூஜா ரன் முயற்சியில் ஈடுபட்டார். வெற்றிகரமாக அந்த பந்தை கவர் பக்கம் படித்து ஒரு ரன் ஓடி முடித்த பூஜா இரண்டாவது ரன்னுக்கு முயற்சி செய்யவில்லை. ஆனால் எதிர் முனையில் நின்ற தீப்தி இரண்டாவது ரன் ஓட முயற்சி செய்தார்.

அப்பொழுது ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த நியூஸிலாந்து மகளிர் அணி வீரர் தீப்தியை ரன் அவுட் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் ஸ்டம்பில் படாமல் அந்த பந்து பிட்ச்சை கடந்து ஸ்கொயர் லெக் திசையில் சென்றது. இதனால் தீப்தி ரன் அவுட் ஆகாமல் தப்பித்துக் கொண்டார்.

பந்து ஸ்கொயர் லெக் திசையில் வெகு தூரம் சென்று விட்டதால் மீண்டும் இரண்டாவது ரன் ஓட தீப்தி முயற்சி செய்தார். ஆனால் அங்கே நின்று கொண்டிருந்த நியூசிலாந்து அணி வீரர் அந்த பந்தை வேகமாக எடுத்து மீண்டும் ஸ்டம்ப் பக்கம் நோக்கி எறிய, மீண்டும் தீப்தி ரன் ஓடாமல் கிரீஸ்ஸ்சுக்குள் வந்துவிட்டார். இதனால் 2 முறை ரன் அவுட் ஆகாமல் தீப்தி தப்பித்துக் கொண்டார். 2 முறை மாறி மாறி தீப்தி ஓடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Published by