மைதானத்தில் அனைவர் முன்னிலையிலும் தன்னுடைய கேர்ள் ஃப்ரெண்டுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அசத்திய தீபக் சஹர்

0
81
Deepak Chahar Proposes Jaya Bharadwaj

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சில நிமிடங்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. போட்டியின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஒருபக்கம் பஞ்சாபி ரசிகர்கள் வெற்றி சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் தீபக் சஹர் தனது காதலிக்கு மைதானத்தில் அனைவர் முன்னிலையிலும் ப்ரொபோஸ் செய்தார்.

இன்று பந்துவீச்சில் சொதப்பி இருந்தாலும், காதலியிடம் ப்ரொபோஸ் செய்து கலக்கிய தீபக் சஹர்

இன்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசிய தீபக் சஹர் 48 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். அவருடைய பந்து வீச்சு இன்று அவ்வளவு சிறப்பாக இல்லை. இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சில் தோற்று இருந்தாலும், தன்னுடைய காதல் வாழ்க்கையில் தீபக் சஹர் ஜெயித்துவிட்டார்.

- Advertisement -

போட்டி முடிந்தவுடன் தீபக் சஹர் நேராக தனது கேர்ள் பிரண்ட்டிடம் சென்று மோதிரத்தை காண்பித்து தன்னுடைய காதலை அனைவர் முன்னிலையிலும் வெளிப்படையாகக் கூறினார். அவரது ப்ரொபோஸை கண்டு அவருடைய காதலி வெட்கத்தின் உச்சிக்கு சென்றார். சுற்றியிருந்த அனைவரும் ஆரவாரம் எழுப்ப, அவருடைய காதலி தீபக் சஹரின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். பின்னர் இருவரும் மோதிரங்களை ஒருவருக்கு ஒருவர் அணிந்து கொண்டனர். தீபக் சஹர் தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த தோல்வியில் சிக்கி தவிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்

இன்றைய தோல்வியுடன் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டி உள்ளது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் டுப்லஸ்ஸிஸ் மட்டுமே இன்று மிகச் சிறப்பாக விளையாடினார். 55 பந்துகளில் 76 ரன்களை அவர் குவித்த காரணத்தினாலே சென்னை அணி 100 ரன்களை கடந்ததும் குறிப்பிடத்தக்கது.

சென்னை அணி பேட்டிங்கில் தடுமாறியது போல் பஞ்சாப் அணியும் தடுமாறும் என்பது அனைவரும் கற்பனை செய்து கொண்டிருந்த நிலையில், கேஎல் ராகுல் மின்னல் வேகத்தில் போட்டியை தனது சிக்ஸருடன் முடித்துவிட்டார். இன்றைய போட்டியில் அவர் 42 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உட்பட 98 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேஎல் ராகுல் அதிரடி ஆட்டத்தினால் 13 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி வெற்றி கனியை எட்டி அனைவரையும் ஆச்சரியத்துக்கு ஆளாக்கியது.

- Advertisement -

அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை அணி வருகிற ஞாயிறன்று டெல்லி அணியுடன் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் எப்படி விளையாடப் போகிறது என்கிற பீதியில் தற்போது அனைத்து சென்னை அணி ரசிகர்கள் உள்ளனர்