சி.எஸ்.கே பயிற்சி செஷனில் கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டத்தைக் கண்டு களித்த தீபக் சஹர் ; – வீடியோ இணைப்பு

0
76
MS Dhoni CSK Net Practice

இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் நடைபெறப் போகிறது. இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற வாய்ப்புகள் தொடர் இந்த ஆண்டு மீண்டும் இந்தியாவில் நடைபெற போவதால் ரசிகர்கள் கூடுதல் உற்சாகமடைந்துள்ளனர்.

வருகிற மார்ச் 26ம் தேதி அன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளனர். இவ்விரு அணிகளும் தீவிர வலையப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

- Advertisement -

இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அட்மின்

இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் அட்மின் சற்று முன்னர் நேரலையில் வந்தார். மைதானத்தில் மகேந்திர சிங் தோனி பேட்டிங் செய்து கொண்டிருப்பதை நமக்கு நேரடியாக காட்டினார். ஜார்கண்டை சேர்ந்த நெட் பந்துவீச்சாளர்கள் அவருக்கு பந்து வீசினார்கள். அவரது எதிர்கொண்டு சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்.

அவர் ஒரு புறம் தோனி விளையாடிக் கொண்டிருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்மின் நேரலையில் தீபக் சஹரை இணைத்தார். நேரலையில் பேசிய தீபக் சஹர் தான் தற்பொழுது காயத்திலிருந்து குணமடைந்தது விளையாட தயாராகிக் கொண்டு இருப்பதாக நம்பிக்கை செய்து அளித்தார். தற்பொழுது அவர் சூரத்தில் இருப்பதாகவும் கூடிய விரைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் கலந்து கொள்ளப் போவதாகவும் கூடுதல் தகவல் அளித்தார்.

தோனி விளையாடுவதைக் கண்டு களித்த தீபக் சஹர் பின்னர் ஓபனிங் வீரர் ருத்ராஜ் கெய்க்கவாத்திடம் பேசினார். இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். இருவரும் பேசி முடிப்பதற்கு முன்பாக, கூடிய விரைவில் அணிக்கு திரும்புமாறு ருத்ராஜ் தீபக் சஹருக்கு அன்பு கட்டளை விடுத்தார்.

- Advertisement -

நாளை மும்பைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள சென்னை அணி வீரர்கள்

முதல் போட்டியையொட்டி நாளை சென்னை அணி வீரர்கள் அனைவரும் மும்பைக்கு செல்ல இருப்பதாகவும் நமக்கு கூடுதல் தகவல் கிடைத்தது. அதன்படி சென்னை வீரர்கள் அனைவரும் நாளைக்கு மும்பைக்கு செல்ல இருக்கின்றனர். அங்கே இரண்டு மூன்று நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகிற சனிக்கிழமை இரவு முதல் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கின்றனர்.