நோ பால் தராததால் களத்தில் இருந்த வீரர்களை திரும்பி வருமாறு அழைத்த கேப்டன் ரிஷப் பண்ட் – வீடியோ இணைப்பு

0
343
Rishabh Pant

நேற்று ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 34-வது ஆட்டம், சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் அணிக்கும், ரிஷாப்பின் டெல்லி அணிக்கும் இடையே, மும்பையின் வான்கடே மைதானத்தில், ஒரு ஹை-ஸ்கோரிங் மேட்ச்சா பல திருப்பங்களோடு நடந்து முடிந்திருக்கிறது!

முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ராஜஸ்தானை பேட் செய்ய அழைக்க, அதற்காகவே காத்திருந்தது போல வந்த பட்லர்-படிக்கல் ஜோடி, டெல்லி அணியின் பந்துவீச்சை நொறுக்கித் தள்ளிவிட்டது. முதல் விக்கெட்டாக படிக்கல் அவுட்டாகும் போது ஸ்கோர் 155, ஓவர் 15. முடிவில் இந்தத் தொடரில் தன் மூன்றாவது சதத்தை பட்லர் அடிக்க, ராஜஸ்தான் 222 ரன்கள் குவித்தது.

அடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு, வார்னர்-பிரித்வி ஜோடி சுமாரன துவக்கம் தர, ரிஷாப்-லலித் ஜோடி ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துப்போனார்கள். ஆனா இவர்கள் ஆட்டமிழக்க, இரண்டு ஓவர்களுக்கு 36 ரன்கள் என்று ஆட்டம் வந்து நின்றது.

அந்த ஓவரை வீசிய பிரசித் லலித்தை அவுட்டாக்கியதோடு, ஓவரையும் மெய்டனாக்க, ஒரு ஓவருக்கு 36 ரன்கள் என ஆட்டம் மாறியது. அடுத்த மெக்காயின் ஓவரில் முதல் மூன்று பந்துகளையும் பவெல் சிக்ஸராய் நொறுக்க, மூன்றாவது பந்து உயர நோ-பாலா என்று சந்தேகம் கிளம்ப, டெல்லி அணி ஆக்ரோசமாக பவுண்டரி லைனிலிருந்து முறையிட ஆரம்பித்தது. ஒருக்கட்டத்தில் பொறுமையிழந்த ரிஷாப், வீரர்களை விளையாட வேண்டாமென்று பெவிலியன் அழைக்கும் அளவுக்குப் போய்விட்டார். நடுவர்கள் சமாதானப்படுத்த முடிவில் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது!