பவுலர் ஆஷ்டன் அகரால் நம்ப முடியவில்லை ; பறவை போல் பறந்து ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்த டேவிட் வார்னர் – வீடியோ இணைப்பு

0
255
David Warner one hand catch

ஆஸ்திரேலிய அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இலங்கை நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி இருந்தது.

இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று பல்லேகலே மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் டஸன் சனாக பேட்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், பாட் கம்மின்சன், ஹசில்வுட் என நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் முழுமையான பலத்தோடு களமிறங்கி இருக்கிறது. இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியின் பலத்தின் முன்னால் சிறிய அணியாகத்தான் தெரிகிறது.

இப்படியான நிலையில் இலங்கை அணியின் பேட்டிங்கை துவங்க வந்த பதும் நிஷாங்கா, தனுஷ்க குணதிலகே இருவரும் அரைசதம் அடித்து, முதல் விக்கெட்டுக்கு 115 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த குசான் மென்டில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 87 பந்துகளில் 86 ரன்கள் அடிக்க, இறுதியில் ஹசரங்கா 19 பந்துகளில் 37 ரன்கள் குவிக்க, இலங்கை 50 ஓவர்களில் 300 ரன்களை குவித்துள்ளது.

இந்த ஆட்டத்தில் பதும் நிஷாங்கா ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து நான்காவது வீரராக பேட்டிங் செய்ய வந்த தனஞ்செய டி சில்வா, ஆஸ்டன் அகர் வீசிய 25.5 ஓவரில், கிரிஸில் இருந்து இறங்கி வந்து, மிட்-ஆன் திசையில் பந்தை அடிக்க, மிட்-ஆன் திசையில் உள்வட்டத்தில் நின்றிருந்த டேவிட் வார்னர், பின்பக்கமாய் எகிறி ஒற்றைக் கையால் அற்புதமாகப் பந்தை பிடித்து, தனஞ்செயாவை ஆட்டமிழக்கச் செய்தது, பார்ப்பதற்கு ஆச்சரியமாய் இருந்தது!

- Advertisement -