டேவிட் வார்னர் அடித்த வித்தியாசமான சிக்சர் – சமூக வலைதளங்களில் வைரல்

0
244
David Warner hitting Six in Dead Ball

டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. நேற்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. பலரும் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று நினைத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி வீரர்களான நீசம் மற்றும் மிச்செல் சிறப்பாக விளையாடி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றனர். நியூசிலாந்து அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் விளையாட போகும் அணி எது என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் இணைந்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். அடித்தளம் சரியாக இருந்ததால் அதை பயன்படுத்தி அடுத்து களத்திற்கு வந்த சமான் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 176 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்பு பேட்டிங் ஆட வந்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அப்ரிடி வீசிய முதல் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டானார் கேப்டன் பிஞ்ச். அதன் பின்பு இணைந்த வார்னர் மற்றும் மார்ஷ் ஜோடி சிறப்பாக விளையாடியது. பவர் பிளே ஓரணியில் அதிரடியாக ஆடிய ரன்கள் குவித்தது இந்த ஜோடி. இவர்களை பிரிப்பதற்காக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அந்த அணியின் சீனியர் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸை பந்து வீச அழைத்தார்.

எட்டாவது ஓவரை வீச வந்த முகமது ஹபீஸ் தான் வீசிய முதல் பந்திலேயே சரியான கண்ட்ரோல் இல்லாததால் வந்து இரண்டு முறை களத்தில் குத்தி வார்னருக்கு சென்றது. இதனை நிதானமாக கணித்து ஆடிய வாரணர் அபாரமாக அதை லெக் சைடில் சிக்சராக மாற்றினார். இரண்டு முறை பந்து குத்தி வந்ததால் இதற்கு நோபால் தரப்பட்டது. நோ பாலுக்கான ஒரு ரன்னையும் சேர்த்து மொத்தம் 7 ரன்கள் இந்த பந்தில் ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்தது.

இப்படி வித்தியாசமான முறையில் அடிக்கப்பட்ட சிக்சரை சமீபத்தில் ரசிகர்கள் யாரும் பார்த்திராததால் இந்த சிக்சரை பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆவலாக பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -