” யார் இப்போது கேக்கை பூசப் போகிறீர்கள் ? ” தோனி முன்னிலையில் நெட் பவுலர் ராக்கியின் பிறந்தநாளைக் கொண்டாடிய சி.எஸ்.கே வீரர்கள் – வீடியோ இணைப்பு

0
106
CSK Net Bowler Rocky Birthday Celebration

2022 ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை ஆரம்பித்து வருகின்றனர். எப்போதும் போல நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வலைபிற்சிக்குள் நுழைந்தனர். அதில் எம்.எஸ்.தோனி அடித்த ஒத்தைக் கை சிக்ஸர் சமூக வலைத்தளத்தில் வைரலாக சென்றது.

கிரிக்கெட்டில் பொதுவாக பிறந்தநாள் நிகழ்ச்சி என்று வந்துவிட்டால் அமோகமான கொண்டாட்டம் இருக்கும். கேக்கை பிசைந்து பர்த்டே பாய் மற்றும் சக வீரர்களின் முகத்தில் பூசி மகிழ்வர். அதே போல் சென்னை அணியிலும் மார்ச் 7 அன்று நெட் பவுலர் ராக்கியின் பிறந்தநாளை கொண்டாடினார். அந்த ஆனந்தமான தருணம் குறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, “ மார்ச் 7 – என் வாழ்வில் மறக்க முடியாத நாள். இதற்காக சென்னை நிர்வாகம், தோனி சார் மற்றும் சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை கவுரவித்ததாக உணர்கிறேன். ” வீடியோவின் தொடக்கத்தில் எம்.எஸ்.தோனி, “ யார் இப்போது கேக்கை பூசப் போகிறீர்கள் ? ” என்று கூறி கொண்டாத்தை ஆரம்பித்து வைத்தார்.

அனுபவ வீரர்கள் அம்பாத்தி ராயுடு மற்றும் உத்தப்பா அவர்களது பயிற்சியைத் தொடங்கிவிட்டனர். அவர்களோடு சேர்த்து யு – 19 இளம் அதிரடி ஆல்ரவுண்டர் ஹங்கரெக்கர் தீவிரமாய் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார். சி.எஸ்.கே நம்பிக்கை நட்சத்திரங்கள் கெய்க்வாட் மற்றும் தீபக் சாஹர் காயம் அடைந்துள்ளதால் ரசிகர்கள் கவலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். ருத்துராஜ் கெய்க்வாட் முதல் போட்டியில் இருந்து ஆட வாய்ப்புள்ளது. ஆனால் பவர்பிளே ஸ்பெசலிஸ்ட் தீபக் சாஹர் அணிக்கு திரும்ப நிச்சயம் ஏப்ரல் 15க்கு மேல் ஆகிவிடும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து களமிறங்குகிறது. மார்ச் 26ஆம் தேதி வான்கடே மைதானத்தில் 7:30 மணிக்கு இவ்வாட்டம் தொடங்குகிறது. தோனி தலைமையிலான அனுபவ அணி வெற்றி பெறுமா அல்லது புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்தும் கொல்கத்தா அணி வெற்றியை ருசிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.