தென் ஆப்பிரிக்காவில் பெற்ற வரலாற்று வெற்றியைக் கொண்டாடும் வகையில் கேப்டன் விராட் கோலி மற்றும் ராகுல் டிராவிட் நடனம் – வீடியோ இணைப்பு

0
861
Virat Kohli and Rahul Dravid Dancing in Sa

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்து முடிந்தது. போட்டியின் முடிவில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு முன்னர் செஞ்சூரியன் மைதானத்தில் இந்திய அணி ஒருமுறைகூட வெற்றியை ருசி பார்த்ததில்லை. ஆனால் இந்த குறையை தீர்க்கும் விதமாக இந்திய அணி நேற்று வெற்றி பெற்று வரலாற்று தற்பொழுது சாதனை படைத்துள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன் மூலமாக டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய மைல்கல்லை நேற்று எட்டியுள்ளார். மறுபக்கம் இளம் வீரர் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக 100 ( டிஸ்மிசல்) விக்கெட்டுகளை நிகழ்த்தி நேற்று அவரும் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். புதிய மைல்கல்லை இருவரும் எட்டியதை கொண்டாடும் வகையில், இவர்கள் இருவரும் இருவரும் இணைந்து ஒன்றாக கேக் வெட்டி கொண்டாடினர்.அந்த புகைப்படத்தை பிசிசிஐ சமூகவலைதளத்தில் வெளியிட்டது.

- Advertisement -

விடுதி ஊழியர்களுடன் நடனமாடிய கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்

இந்திய அணி தங்கியிருந்த விடுதிக்கு வெளியே கேப்டன் விராட் கோலி விடுதி ஊழியர்களுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் தன்னை மறந்து ஆடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. அதை அனைவரும் பகிர்ந்து விராட் கோலி ஆடுவதை மாத்திரம் பேசிக் கொண்டு வந்தனர். ஆனால் அந்த வீடியோவில் விராட் கோலிக்கு பின்னால் இருந்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிடும் நடனம் ஆடியிருக்கிறார். தற்பொழுது அதைச் சுட்டிக்காட்டி அனைத்து இந்திய ரசிகர்களும் இந்த வீடியோவை மேலும் வைரலாக்கி கொண்டு வருகின்றனர்.

பிசிசிஐ மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் கேப்டன் விராட் கோலி சமீப சில வருடங்களில் இந்திய அணி வெளி மண்ணில் நிறைய வெற்றிகளை ருசி பார்த்துக் கொண்டு வருகிறது. இது எங்களுக்கு மிகவும் பெருமையான ஒரு உணர்வு என்று உணர்ச்சி பொங்க கூறியிருந்தார். அந்த வீடியோவில் கேஎல் ராகுல், “செஞ்சூரியன் மைதானத்தில் முதல் முறையாக வெற்றி பெற்றிருப்பது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்”.

அந்த வீடியோவின் இறுதியில் ரவிச்சந்திரன் அஸ்வின், புஜாரா மற்றும் முகமது சிராஜ் மூவரும் இணைந்து நடனமாடிய தொகுப்பும் இணைக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோவும் தற்பொழுது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முதல் போட்டியில் தொடர்ந்து இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி மாதம் மூன்றாம் தேதி ஜோகனஸ்பர்க்கில் நடைபெறுகிறது.