புவனேஷ்வர் குமார் கேட்ச்சைத் தவற விட்டதால் கோபத்தில் பந்தை எட்டி உதைத்த கேப்டன் ரோஹித் ஷர்மா – வீடியோ இணைப்பு

0
733
Bhuvaneshwar Kumar drops Powell Catch

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு, நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி. இதன்மூலம் ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் பெற்றார். தற்போது நடந்து வரும் டி20 தொடரிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி நடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-வது போட்டியில் நேற்று விளையாடியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கிஷன் மற்றும் ரோகித் இணைந்து சரியாக துவக்கம் கொடுக்காவிட்டாலும் அதன்பிறகு வந்த கோலி, பண்ட் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பாக ஆடி கொடுத்து இந்திய அணியின் ஸ்கோரை 186 வரை கொண்டு சென்றனர். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 28 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

பெரிய இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கிங் மற்றும் மேயர்ஸ் நிதானமான துவக்கம் கொடுத்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் அவுட் ஆன பிறகு அணியின் துணை கேப்டன் பூரன் மற்றும் பவல் இணைந்து அதிரடியாக ரன்களை சேர்த்தனர். இவர்களைப் பிரிக்க, கிரிக்கெட் கேப்டன் ரோகித் எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணாகிக் கொண்டே இருந்தன. ஒருகட்டத்தில் இருவரும் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடும் என்ற நிலை இருந்தது.

போதாக்குறைக்கு புவனேஸ்வர் தான் வீசிய 16வது ஓவரிலேயே, அதிரடி காட்டி கொண்டிருந்த பாவலின் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் கேப்டன் ரோகித் பந்தை உதைத்து தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனால் கடைசி நேரத்தில் 19ஆவது ஓவரை சிறப்பாக வீசிய புவனேஸ்வர் தான் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.

இன்னமும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில், அதிலும் இந்திய அணி வெற்றிபெற்று டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்யுமா என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

- Advertisement -