இந்திய வீரர்கள் சூழ்ந்து நிற்க ராஜ மரியாதையுடன் விராட் கோலியை நுழையச் செய்த கேப்டன் ரோஹித் ஷர்மா – வீடியோ இணைப்பு

0
937
Virat Kohli guard of honour by Rohit

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் ரோஹித் மற்றும் மயங்க் அகர்வால் நிதானமாக விளையாடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். பின்னர் வந்த ஹனும விஹரி 58 ரன்கள் குவித்தார்.

தன்னுடைய 100வது போட்டியில் விளையாடிய விராட் கோலி 45 ரன்கள் குவிக்க, பின்னர் வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 97 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் உட்பட 96 ரன்கள் குவித்தார். ஏழாவது வீரராக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 228 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 175* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

இந்திய வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மிக சிறப்பாக விளையாடிய காரணத்தினால் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்தது. 574 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்துள்ளது.

100வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு ராஜ வரவேற்பு கொடுத்த இந்திய வீரர்கள்

முன்னர் கூறியிருந்தது போல இந்த போட்டி விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியாகும். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி முடித்த பின்னர் இலங்கை அணி அதனுடைய முதல் இன்னிங்சில் விளையாட தயாராக இருந்தது. பேட்ஸ்மேன்கள் மைதானத்திற்குள் வந்த நிலையில், இந்திய வீரர்கள் அனைவரும் மைதானத்திற்குள் வந்தனர்.

அப்பொழுது மைதானத்துக்குள் முன்னரே நுழைந்த விராட் கோலியை ரோஹித் அழைத்து மைதானத்திற்கு வெளியே நிற்கச் சொன்னார். விராட் கோலியும் கேப்டன் ரோஹித் கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டு மைதானத்திற்கு வெளியே சென்றார். பின்னர் இந்திய வீரர்கள் அனைவரும் இரண்டு வரிசையாக அவருடைய இந்த ஒப்பற்ற நிலைக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராஜ வரவேற்பு கொடுத்தனர்.

- Advertisement -

விராட் கோலியும் சந்தோசத்துடன் தனது வலது கையை உயர்த்தி ஒரு ராஜாவைப் போல கம்பீரமாக மைதானத்திற்குள் உள் நுழைந்தார். அவர் அவ்வாறு உள்ளே நுழைந்த வீடியோவை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தது. அந்த வீடியோ தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

வெற்றிக்கு போராடி வரும் இலங்கை அணி

முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இலங்கை அணி தற்பொழுது 28 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் ஓபனிங் வீரர் திரிமன்னே ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய திமுத் கருணரத்னே 28 ரன்கள் எடுத்த நிலையில் ரவிந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தற்பொழுது களத்தில் நிசங்கா மற்றும் மேத்யூஸ் பேட்டிங் செய்து கொண்டிருக்கின்றனர்.