இர்பான் பதானின் அதிவேக அரை சதம் வீண் ; 7 ஆண்டுகளுக்கு முன் செய்ய தவறியதை நேற்று செய்து காட்டிய பிரெட் லீ – வீடியோ இணைப்பு

0
2598
Brett Lee and Irfan Pathan Legends Leauge Cricket

இந்தியாவில் ஐபிஎல் தொடர் எவ்வளவு பிரபலமோ அதே போல ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் தொடர் மிகவும் பிரபலம். இங்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறந்த அணிகளாக விளங்குவதைப் போல அங்கே சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்சர்ஸ் சிறந்த அணிகளாக விளங்குகிறது.

2015 ஆம் ஆண்டு நடந்த பிக் பேஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகள் மோதின. சிட்னி சிக்சர்ஸ் அணியில் விளையாடிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீயின் கடைசி பிக் பேஷ் போட்டி அதுவென்பது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்தது. பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி விளையாட தொடங்கியது. 19 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்தது. இறுதி ஓவரில் அந்த அணி வெற்றி பெற 8 ரன்கள் தேவை.

சிட்னி சிக்சர்ஸ் அணியைச் சேர்ந்த பிரெட் லீ இறுதி ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 ரன்கள் மற்றும் ஒரு சிங்கிள் என 7 ரன்கள் வந்தது. மிஞ்சியுள்ள மூன்று பந்துகளில் அந்த அணி ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற சிறப்பான நிலையில் இருந்தபொழுது, நான்காவது மற்றும் ஐந்தாவது பிரெட் லீ மிக சாமர்த்தியமாக வீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இறுதி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி இருந்தது. அந்த பந்தையும் மிக சாமர்த்தியமாக பிரெட் லீ வீசிய பொழுதிலும், ஒரு அழகான ரன் அவுட் வாய்ப்பை கேப்டன் ஹென்ரிக்ஸ் தவற விட்ட காரணத்தினால் அந்த அணி இறுதியில் தோல்வி அடைந்தது.
இதன் மூலமாக பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

- Advertisement -

அன்று செய்யத் தவறியதை ஏழு ஆண்டுகளுக்குப் பின் செய்து முடித்துள்ள பிரெட் லீ

இந்திய அணியை பிரதிபலிக்கும் வகையில் இந்தியா மகாராஜாஸ், ஆசிய அணியை பிரதிபலிக்கும் வகையில் ஆசியா லயன்ஸ் மற்றும் வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ் என மூன்று அணிகள் கொண்ட லெஜன்ட்ஸ் லீக் டி 20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த தொடரின் கடைசி லீக் சுற்றுப் போட்டியில் இந்தியா மகாராஜாஸ் மற்றும் வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது. பின்னர் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா மகாராஜாஸ் அணி விளையாட தொடங்கியது.

19 ஓவர் முடிவில் 221 ரன்கள் குவித்து இறுதி ஓவரில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறப்பான நிலையில் இந்தியா மகாராஜாஸ் இருந்தது. இறுதி ஓவரை வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ் அணியைச் சேர்ந்த பிரெட் லீ வீச வந்தார். ஏழு ஆண்டுகளுக்கு முன் இறுதி ஓவரில் 8 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் இருந்த அதே நிலையில்தான் நேற்று பிரெட் லீ இருந்தார்.

இறுதி ஓவரின் முதல் பந்தை வைடாகா அவர் வீச, 6 பந்துகளில் இந்தியா மகாராஜாஸ் அணி வெற்றி பெற 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அந்த ஆறு பந்துகளையும் மிக சாமர்த்தியமாக வீசி 2 விக்கெட் மற்றும் ஒரு ரன்னை மட்டுமே கொடுத்து பிரெட் லீ அசத்தினார். இதன் காரணமாக வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ் மற்றும் ஆசியா லயன்ஸ் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள இருக்கின்றன. இவ்விறுதி போட்டி நாளை இந்திய நேரப்படி 8 மணியளவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.