டேவிட் மில்லரின் முக்கிய கேட்சை பிடிக்க முயற்சி கூட செய்யாமல் நின்ற ஷிவம் டுபே ; கடுப்பான பிராவோ – வீடியோ இணைப்பு

0
3167
Shivam Dube and Dwayne Bravo

ஐ.பி.எல்-ல் இரண்டாவது டபுள் ஹெட்டர் போட்டி நாளான இன்று இரண்டாவது போட்டியில், மஹாராஷ்ட்ராவின் புனே மைதானத்தில் சென்னை அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த மைதானத்தில் பனிப்பொழிவு பிரச்சினை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது!

குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சிறிய காயமொன்றால் இன்று விளையாடாத நிலையில், அவருக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பேற்ற ரஷீத்கான் டாஸை வென்று, சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

- Advertisement -

இதன்படி சென்னை அணிக்காக பேட்டிங்க செய்ய வந்தவர்களில் உத்தப்பாவும் மொயீன்அலியும் ஏமாற்ற, ருதுராஜீம் அம்பதியும் சிறப்பாக விளையாடி, இருபது ஓவர்களில் சென்னை அணி 169 ரன்களை எட்ட உதவினர். ஒருகட்டத்தில் சென்னை 180 ரன்களை எட்டும் நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்பு 170 ரன்களை நோக்கிய குஜராத் அணி முதல் ஐந்த விக்கெட்டுகளை வேகமாக இழந்து தத்தளித்த பொழுது, மில்லரும் ரஷீத்கானும் ஜோடி சேர்ந்து அணியை மீட்டதோடு கடைசியாய் வெற்றி பெறவும் வைத்துவிட்டனர். ஆட்டத்தின் 17வது பிராவோவின் ஓவரில், மில்லர் டீப் மிட் விக்கெட்டில் தூக்கியடிக்க, எளிதாய் கேட்ச் செய்ய வேண்டிய அந்த பந்தை வெளிச்ச குறுக்கீட்டால் தவறவிட்டார். கடைசியாய் ஆட்டத்தையே சென்னை இழந்துவிட்டது!