எகிறி குதித்து ஒற்றைக் கையால் கடினமான கேட்சை பிடித்து பினுரா பெர்னாண்டோ அசத்தல் ; சஞ்சு சாம்சன் ஏமாற்றம் – வீடியோ இணைப்பு

0
177
Binura Fernando Catch

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி சற்றுமுன்னர் நடந்து முடிந்து.போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த்து. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.
இலங்கை அணியில் ஓபனிங் விளையாடிய பதும் நிசாங்கா அதிக பட்சமாக 53 பந்துகளில் 11 பவுண்டரி உட்பட 75 ரன்கள் குவித்தார்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 17.1 ஆவது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்றது.இந்திய அனியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 44 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்டரி உட்பட 74* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்கமகாமல் இருந்தார். இந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்கிற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

அபாரமாக கேட்ச் பிடித்த பினுரா பெர்னாண்டோ

இந்திய அணி சேஸ்ஸிங் செய்து கொண்டிருந்த பொழுது 13ஆவது ஓவரை லஹிரு குமாரா வீசினார்.அந்த ஓவரில் முதல் 5 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் 3 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரி என 22 ரன்கள் விளாசினார்.அந்த ஓவரின் கடைசி பந்தையும் சிக்ஸர் அல்லது பவுண்டரிக்கு அடிக்க முயற்சி செய்த சாம்சன் அந்த பந்தை தூக்கி அடித்தார்.

அவர் அடித்த அந்த பந்து சற்று எட்ஜ் ஆகி ஸ்லீப் பக்கம் பறந்தது. அங்கே ஸ்லீப் பகுதியில் நின்று கொண்டிருந்த பினுரா பெர்னாண்டோ திடீரென சரியான நேரத்தில் தாவி ஒற்றை கையால் ( இடது கையில் ) அந்த பந்தை பிடித்தார். எப்படியும் அந்த பந்து அவரை கடந்து பவுண்டரிக்கு சென்றுவிடுமென அனைவரும் நினைக்க, யாருமே எதிர்பாராத வகையில் மிகவும் கடினமான கேட்ச்சை பினுரா பெர்னாண்டோ பிடித்து அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளார். அவர் கேட்ச் பிடித்த அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.