5 சிக்ஸர்கள் 1 பவுண்டரி என ஒரே ஓவரில் 34 ரன்கள் ; கவுண்டி கிரிக்கெட்டில் அதிரடி சதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ் – வீடியோ இணைப்பு

0
76
Ben Stokes

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணி வெளிநாடுகளில் மட்டுமல்லாது உள்நாட்டிலும் நியூசிலாந்து, இந்தியான என தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆசஷ் தொடரில் ஆஸ்திரேலியாவில் மரண அடி வாங்க, ஜோ ரூட் தலைமையின் மீது கடுமையான விமர்சனங்கள் எழத் தொடங்கின.

விமர்சனங்கள் ஒரு புறம் இருந்தாலும், ஜோ ரூட்டின் தனிப்பட்ட பேட்டிங் மிகச் சிறப்பாகவே இருந்து வந்தது. நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா என வெளியே விளையாடிய அனைத்துத் தொடர்களிலும் ரன்களை குவிக்க அவர் தவறவில்லை. கடந்த ஆண்டு ஜோ ரூட் அடித்த டெஸ்ட் ரன்கள் மட்டுமே 1708. இது ஒரு ஆண்டில் அடிக்கப்பட்ட மூனாவது அதிக டெஸ்ட் ரன்கள் ஆகும். முதலிடத்தில் பாகிஸ்தானின் யூசுப் யுகானாவும் [1788 ரன்கள், 2016] சர் இரண்டாமிடத்தில் விவியன் ரிச்சர்ட்ஸூம் [1710 ரன்கள், 1976 ஆம் ஆண்டு] இருக்கிறார்கள்.

- Advertisement -

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பேட்டிங்கில் ஜோ ரூட்டின் இடத்தைத் தவிர எல்லா இடங்களுமே பிரச்சினையாக இருந்தது. இதற்கான காரணமாக, இங்கிலாந்தின் உள்நாட்டு கவுன்டி அணிகள் நல்ல டெஸ்ட் வீரர்களை உருவாக்க தவறியதே என்று கூறப்பட்டது. இதையடுத்து கவுன்டி அணிகள் டெஸ்ட் வீரர்களின் தரத்தை உயர்த்த முடிவு செய்தன. இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், சாம் கரன் போன்ற வீரர்களும் டெஸ்டில் கவனம் செலுத்துவதற்காக, இந்தியாவின் ஐ.பி.எல் தொடரிலும் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து ஜோ ரூட் விலக, புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார்.

தற்போது உள்நாட்டு கவுன்டி டெஸ்ட் தொடரில் டர்ஹாம் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வொர்ஷெஸ்டெர்ஷைர் அணிக்கு எதிராக 64 பந்துகளில் சதமடித்து அசத்தி இருக்கிறார். மொத்தம் 88 பந்தில் 161 ரன்களை அடித்த பென் ஸ்டோக்ஸ், அதில் 17 சிக்ஸர்களை வெளுத்திருக்கிறார். இது கவுன்டி அணிகளுக்கான போட்டியில் உலக சாதனையாக அமைந்திருக்கிறது. இதில் ஒரே ஓவரில் தொடர்ந்து ஐந்து சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 34 ரன்களையும் விளாசியிருக்கிறார்கள். இதனார் டர்ஹாம் அணி வலுவாக 580/6 என்று டிக்ளேர் செய்திருக்கிறது. மீதமிருக்கும் ஒரு டெஸ்டில் விளையாட இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்குச் சவால் காத்திருக்கிறது போல!