தனது கடைசி ஒருநாள் போட்டியில் கண்கலங்கிய பென் ஸ்டோக்ஸ் – வீடியோ இணைப்பு

0
208
Ben Stokes crying

நேற்று இங்கிலாந்தின் டர்ஹாம் மைதானத்தில் இங்கிலாந்து தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. தனது சொந்த இடம் மற்றும் மைதானமான டர்ஹமில் நடக்கும் இந்தப் போட்டியோடு பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது!

தென் ஆப்பிரிக்க அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி நேற்று நடக்க, போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் கேசவ் மகராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக வரவில்லை. இங்கிலாந்து அணியில் ரீஸ் டாப்லி, டேவிட் வில்லிக்குப் பதிலாக, மேத்யூ பாட்ஸ், சாம் கரன் இடம்பெற்றனர். மேலும் லெக் ஸ்பின்னர் அடில் ரஷீத் இடம்பெற்றார்.

- Advertisement -

இதன்படி பேட்டிங்கை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜனமென் மலான் மற்றும் ராஸி வான்டர் டெசன் ஜோடி 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அடுத்து ராஸி வான்டர் டெசன், எய்டன் மார்க்ரம் ஜோடி 151 பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஜனமென் மலான் 57, எய்டன் மார்க்ரம் 77, ராஸி வான்டர் டெசன் 134 என ரன்கள் குவிக்க, தென் ஆப்பிரிக்க அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் 333 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்தனர். ஜேசன் ராய் 43, ஜானி பேர்ஸ்டோ 63, ஜோ ரூட் 83 என வரிசையாகச் சிறப்பாக ரன் சேர்த்தாலும், பின்வந்த எந்த இங்கிலாந்து வீரரும் நிலைத்து நிற்காததால் 46.5 ஓவர்களில் 271 ரன்களில் இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. தென்ஆப்பிரிக்க அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ராஸி வான்டர் டெசன் ஆட்டநாயகன் விருது வென்றார்!

இன்று தனது கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்திற்கு முன்பு, இங்கிலாந்து பீல்டிங்கில் களமிறங்கும் பொழுது, இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸிற்கு வரவேற்பு கொடுத்தனர். வரவேற்போடு களம்புகுந்த பென் ஸ்டோக்ஸ் அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு சிறிது கண் கலங்கிவிட்டார். இங்கிலாந்து கிரிக்கெட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் இரசிகர்கள் இடையே பெயரெடுத்த இங்கிலாந்து வீரர்களின் பென் ஸ்டோக்சும் ஒருவர்!

- Advertisement -