ஆஸ்திரேலியாவில் ரசலுக்கு அடித்த அதிர்ஷ்டம் – ஸ்டெம்பில் பந்து அடித்தும் கீழே விழ மறுத்த பெயில்ஸின் வீடியோ இணைப்பு

0
218
Russell Bails Not falling down in BBL

ஆஸ்திரேலிய நாட்டில் தற்போது பிக் பேஷ் லீக் தொடர் நடந்து வருகிறது. ஒருபக்கம் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷஸ் தொடர் நடந்து வந்தாலும் மறுபக்கம் இந்த டி20 லீக் சிறப்பாக நடந்து வருகிறது. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. இன்று நடந்த போட்டியில் மெல்போர்ன் மற்றும் சிட்னி அணிகள் மோதின. முதல் போட்டியில் மெல்போர்ன் அணி ஏற்கனவே தோல்வியைப் பெற்றிருந்தது. அந்த அணியின் சீனியர் வீரர் ஸ்டோய்னிஸ் இன்றைய ஆட்டத்திற்கு அணிக்கு திரும்பியதால் ஆட்டம் தொடங்கும் முன்பே விருவிருப்பு தொடங்கியது.

டாஸ் வென்ற மெல்போர்ன் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மெல்போர்ன் மிகவும் கட்டுக்கோப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சிட்னி அணி 17 ஓவர்கள் முடிவில் 102 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் அதன்பிறகு அலெக்ஸ் ராஸ் என்னும் வீரரின் அதிரடியான ஆட்டத்தால் சிட்னி அணி 151 ரன்கள் குவித்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மெல்போன் மணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் ஸ்டொய்னிஸ் நிதானமான துவக்கம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரர் ஜோ கிளார்க் விரைவாக ஆட்டம் இழந்தாலும் கேப்டன் மேக்ஸ்வெல் 25 பந்துகளுக்கு 40 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி கொடுத்தார்.

அதிரடி வீரரான ரசல் 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்சர்கள் அடக்கம். இந்த ஆட்டத்தில் ரசலுக்கு அதிர்ஷ்டம் மிகவும் கை கொடுத்தது. ஆட்டத்தின் 15வது ஓரை தன்வீர் சங்கா என்ற பந்துவீச்சாளர் வீசினார். ஏற்கனவே இவர் ஸ்டோனிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ரசல் விக்கெட்டையும் எடுக்க பந்து வீசிய போது பந்து ரசலின் காலில் பட்டு ஸ்டம்ப்புகளை நோக்கி சென்றது. பந்து ஸ்டம்புகளில் மோதிய போதும் பெயில்ஸ் கீழே விழாத காரணத்தினால் ரசல் ஆட்டமிழக்கவில்லை.

இதன் பிறகு ரசல் சிறப்பாக விளையாடிய ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இன்னமும் பல ஆட்டங்கள் மெல்போன் அணிக்கு இருப்பதால் ரசலின் அதிரடியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.