மும்பை மைதானத்தில் அச்சு அசல் மலிங்காவைப் போலவே பந்துவீசி முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த இளம் வீரர் பதிரானா – வீடியோ இணைப்பு

0
6133
Matheesha Pathirana bowling like Lasith Malinga

நடப்பு ஐ.பி.எல் தொடரின் பதினைந்தாவது சீசனின் 62வது போட்டியில், சென்னையும், குஜராத் அணியும், மும்பையின் வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றன. குஜராத் ப்ளேஆப்ஸ் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்க, சென்னை ப்ளே-ஆப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்திருந்தாலுமே, இந்தப் போட்டிக்கு இரசிகர்களின் ஆதரவு அமோகமாய் இருந்து வருகிறது.

இந்த ஆட்டத்தில் சென்னை அணி பிரசாந்த் சோலங்கி, மதீஷா பதிரணா என இரண்டு புதிய வீரர்களை அறிமுகப்படுத்தியது. குஜராத் அணியில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

- Advertisement -

இதன்படி சென்னை அணிக்குத் துவக்கம் தர வந்த டிவோன் கான்வோ ஆரம்பத்திலேயே மொகம்மத் ஷமியால் வெளியேறினார். நிலைத்து விளையாடிய மற்றுமொரு தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் சிறப்பாக விளையாடி அரை சதமடித்தார். விக்கெட்டுகள் கைவசம் இருந்தாலும், ஆடுகளம் இருவேறு விதமான வேகத்தோடும், பந்து ஒட்டியும் வந்ததால், சென்னை அணி பேட்ஸ்மேன்களால் எளிதாய் ரன் குவிக்க முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணியால் 133 ரன்களே எடுக்க முடிந்தது.

அடுத்து களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான சஹாவும், கில்லும் பவர்ப்ளேவில் அதிரடியாய் ஆடி 50 ரன்களை தாண்டினார்கள். இவர்கள் விளையாடும் பொழுது, ஆடுகளம் வேறுவிதமாக இருப்பதுபோல் தெரிந்தது. அவ்வளவு எளிதாய் ரன்களை குவித்தார்கள். இதற்கடுத்து ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் இலங்கையின் குட்டி மலிங்கா எனப்படும் மதிஷா பதிரணாவை மகேந்திர சிங் தோனி கொண்டுவந்தார். மதிஷா பதிரணா தனது ஐ.பி.எல் கேரியரின் முதல் பந்தை புல்லாக கில்லுக்கு கால்களுக்கு வீச, பந்து ஸ்கிட்டாகி கில்லை ஏமாற்றி, கால்களில் தாக்கியது. அம்பயரிடம் அவுட் அப்பீலுக்கும் போனதும் அவர் அவுட் கொடுத்துவிட்டார். பின்பு சுப்மன் கில் மூன்றாவது நடுவரிடம் போக, அதிலும் அவுட் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் ஐ.பி.எல்-ல் அறிமுகமான போட்டியில், வீசிய முதல் பந்தில் விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சிறப்பை மதிஷா பதிரணா பெற்றார்!