100 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகள் காலி ! பவுலர்களுடன் பார்ட்னேஷிப் அமைத்து ஒற்றை ஆளாக நின்று சதம் அடித்த பாபர் அசாம் – வீடியோ இணைப்பு

0
509
Babar Azam

பாகிஸ்தான் அணி தற்போது இலங்கைக்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இலங்கை அணி இதற்கு முன்பு உள்நாட்டில் டி20 தொடரை ஆஸ்திரேலியாவிடம் இழந்து, ஒருநாள் தொடரை கைப்பற்றி, டெஸ்ட் தொடரை சமன் செய்திருந்தது.

தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் சுற்றுப் போட்டிகளில், ஆஸ்திரேலிய அணியை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வென்றது முக்கியமான ஒன்றாக அமைந்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டிக்குத் தகுதிபெற ஐந்து அணிகளுக்குள் தற்போது போட்டி நிலவி வருகிறது. இந்தக் காரணத்தால் தற்போது இலங்கை-பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது!

- Advertisement -

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, நேற்று காலே சர்வதேச மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் கருணரத்ன பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி கேப்டன் கருணரத்னவும், ஓசாடா பெர்னாடோவும் துவக்க வீரர்களாகக் களமிறங்கினார்கள். இலங்கை அணியில் தினேஷ் சண்டிமால் மட்டுமே நிலைத்து நின்று 76 ரன்கள் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் குறிப்பிடும்படி விளையாடததால், இலங்கை அணி 66.1 ஓவர்களில் 222 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி 58 ரன்கள் தந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்!

இதையடுத்து களமிறங்கி பாகிஸ்தான் அணிக்கு, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட பிரபாத் ஜெயசூர்ய பெரிய நெருக்கடியை அளித்தார். 85 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து ஒன்பது விக்கெட்டுகளை 148 ரன்களுக்கு இழந்தது.

- Advertisement -

இதையடுத்து கடைசி விக்கெட்டாக வந்த நதீம் ஷாவை வைத்துக்கொண்டு, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் மிகச்சிறப்பாக ரன் சேர்த்த ஆரம்பித்தார். ஒருமுனையில் நதீம் ஷாவும் பிரமாதமான ஒத்துழைப்பை தந்தார். அவர் தான் சந்தித்த 39வது பந்தில்தான் முதல் ரன்னை எடுத்தார். மறுபுறத்தில் புத்திசாலித்தனமாக ரன்களை திரட்டிய பாபர் ஆசம் சதத்தை மெல்ல மெல்ல நெருங்கி, இறுதியில் வெற்றிக்கரமாக சதமடித்தார். பாகிஸ்தான் கேப்டன் ஒருவர் இலங்கை மண்ணில் டெஸ்ட் போட்டியில் சதமடிப்பது இதுவே முதல் முறை.

கடைசி விக்கெட்டுக்கு இருவரும் எழுபது ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தி இருக்கிறார்கள். இதில் நதீம் ஷா எடுத்தது வெறும் 5 ரன்கள் மட்டுமே. இறுதியில் பாபர் ஆசம் 119 ரன்களில் ஆட்டமிழக்க, 90.5 ஓவர்களில் 218 ரன்களில் பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்ய 82 ரன்கள் தந்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்!