சென்னை ரசிகை தலையில் பலமாக தாக்கிய பந்து ; ஆட்டத்தின் இடையே பரபரப்பு – வீடியோ இணைப்பு

0
79
Ayush Badoni Six hits a CSK Fan in Stadium

ஐ.பி.எல்-ன் ஏழாவது போட்டி மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில் சென்னை லக்னோ இடையே பரபரப்பாக பல திருப்பங்களோட நடைபெற்று முடிந்துள்ளது.

ஆட்டத்தைத் தீர்மானிக்கும் டாஸை வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பீல்டிங் செய்வதாக முடிவெடுத்தார். சென்னை அணியின் பேட்டிங்கை துவங்க வந்த ருதுராஜ் ஏமாற்றினாலும், ராபின் உத்தப்பா அதிரடியாக விளையாடி வலிமையான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

பின்பு வந்த மொயீன் அலி, சிவம் துபே, அம்பதி, ஜடேஜா, தோனி என அனைவரும் அதிரடி காட்ட, இருபது ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை குவித்தது. லக்னோ அணி வீரர் பிஷ்னோய் சிறப்பாகப் பந்து வீசி 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்பு கடினமான இலக்கை நோக்கி ஆட ஆரம்பித்த லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுல்-டிகாக் இருவரும் சிறப்பாக அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு முனையில் லீவிஸ் ஆட, மறுமுனையில் விக்கெட் சரிந்தது.

இந்த நிலையில் இரண்டு ஓவர்களுக்கு 34 ரன்கள் தேவையென்ற நிலையில், 19வது ஓவரை சிவம் துபே வீச, அதை இளம்வீரர் ஆயுஷ் பதோனி சிக்ஸருக்கு தூக்கியடித்தார். அப்போது கூட்டத்திலிருந்த சென்னை இரசிகை ஒருவர் பிடிக்க முயல, தவறி தலையில் பந்து நேராக மோதியது. அருகிலிருந்தவர்கள் பதறி அவரை பரிசோதித்த பொழுது, பெரியளவில் காயமில்லை என்று தெரிகிறது!