ரஸலை கோல்டன் டக் அவுட் ஆக்கிய அஷ்வின் ; வெறித்தனமான விக்கெட் கொண்டாட்டம் – வீடியோ இணைப்பு

0
818
Andre Russell and Ravichandran Ashwin

நேற்று ஐ.பி.எல் பதினைந்தாவது சீஸனின் முப்பதாவது ஆட்டம், மும்பை ப்ரோபோர்ன் மைதானத்தில், சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் அணிக்கும், ஸ்ரேயாஷின் கொல்கத்தா அணிக்கும் இடையே, லாஸ்ட் ஓவர் திரில்லர் மேட்ச்சாக நடந்து முடிந்துள்ளது!

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஷ் பந்துவீச்சை தேர்வு செய்ய, ராஜஸ்தானின் பேட்டிங்கை துவங்க வந்த படிக்கல் நிதானம் காட்ட, பட்லர் வாணவேடிக்கை காட்டினார். காட்டியதோடு இல்லாமல் இந்தத் தொடரின் இரண்டாவது சதத்தையும் அடிக்க, நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவரில் ராஜஸ்தான் 217 ரன்களை குவித்தது!

இதையடுத்து களமிறங்கிய சுனில் நரைன் முதல் பந்திலேயே ரன் அவுட் ஆக, அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாசும், ஆரோன் பின்ஞ்சும் ராஜஸ்தான் பவுலர்களுக்கு பதிலடி தர ஆரம்பித்தனர். ஆரோன் பின்ஞ் அவுட்டாக, ஒரு கட்டத்தில் கொல்கத்தா எளிதில் வெற்றி பெறும் நிலையே இருந்தது.

அப்போது 14வது அஷ்வின் ஓவரில் களமிறங்கினார் ஆன்ட்ரூ ரஸல். முதல் மூன்று பந்துகளை ஸ்ரேயாஷ் ஆட, நான்காவது பந்தில் முதல் ஸ்ட்ரைக் எடுக்க வந்தார் ரஸல். அவரது எந்த அதிரடி பற்றியும் கவலைப்படாத அஷ்வின், பேட்டிங் விக்கெட்டில் ஸ்லிப் வைத்து, ஒரு கேரம் பந்தை வீச, ரஸல் ஏமாந்து தடுமாற, பந்து ஆப்-ஸ்டம்ப்பை தட்ட, கிளீன் போல்ட். ரஸல் கோல்டன் டக். இந்த நேரத்தில் அஷ்வின் செய்த வெற்றிக்கொண்டாட்டம் வெறித்தனமாக இருந்தது. என்னால் முடியும் என்னால் முடியும் அவர் அவரிடமே சொன்னது மாதிரி இருந்தது. இறுதியில் அஷ்வின் அணியான ராஜஸ்தானே வென்றது!