குல்தீப் யாதவ் பந்துவீசும் போது குனிந்து நின்று ஆடிய ரவி அஷ்வின் ; காரணம் இதுதான் – வீடியோ இணைப்பு

0
7908
Ashwin stance against Kuldeep Yadav

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 58வது போட்டியில், நவி மும்பையின் டி.ஒய் பாட்டில் மைதானத்தில், சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷாப் பண்ட்டின் டெல்லி கேபிடல்ஸ் அணியும் தற்போது பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இரு அணிகளுக்குமே ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பிற்கு இது மிக முக்கியமான போட்டி.

ராஜஸ்தான் அணி தான் விளையாடியுள்ள 11 ஆட்டங்களில், 7 ஆட்டங்களை வென்று, 14 புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. டெல்லி அணி தான் விளையாடியுள்ள 11 ஆட்டங்களில், 5 போட்டிகளை வென்று, 10 புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியில் ஹெட்மயருக்குப் பதிலாக வான்டர் டெசன் வந்திருக்கிறார். டெல்லி அணியில் கலீல் அகமதுக்குப் பதிலாக சேத்தன் சர்காரியா வந்திருக்கிறார். முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்து, ராஜஸ்தானின் ஜோஸ் பட்லர் உள்ளே வரும் பந்துகளுக்குத் தடுமாறுவதைக் கணித்து, சேத்தன் சர்காரியாவை வைத்து துவக்கத்திலேயே பட்லரை வெளியேற்றினார்.

ஆனால் மூன்றாவது பேட்ஸ்மேனாக உள்ளே வந்த அஷ்வின் வித்தியாசமான ஸ்டேன்சில் நின்று விளையாடி, அரைசதமடித்து அசத்தி இருக்கிறார். தான் உயரம் அதிகமாய் இருப்பதால், கிரிஸில் குனிந்து அவர் நிற்கும் விதம், பந்து வலுவாய் அடிக்க உதவி செய்கிறது. குறிப்பா ஸ்பின்னர்களை தாக்க முடிகிறது. மிகச்சிறப்பாக விளையாடிய அஷ்வின் 38 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸரோடு 50 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் பல வெரைட்டி காட்டும் அவர், தற்போது பேட்டிங்கிலும் வித்தியாசம் காட்டி ஜொலிப்பது இரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது!