20வது ஓவரில் 4 விக்கெட்டுகள் கைபற்றி ஆண்ட்ரே ரஸல் புதிய சாதனை – வீடியோ இணைப்பு

0
96
Andre Russell 4 wickets in 20th over

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின், டபுள் ஹெட்டர் நாளான இன்று முதல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் மோதி வருகின்றன!

குஜராத் அணி விஜய்சங்கரை நீக்கி கேப்டன் ஹர்திக்கை கொண்டுவந்திருந்தது. கொல்கத்தா அணி பேட் கம்மின்ஸை நீக்கிவிட்டு டிம்செளதியைக் கொண்டு வந்திருந்தது. இந்தத் தொடரில் முதல் முறையாக டாஸ் வென்ற கேப்டன் ஹர்திக் பேட்டிங்கை தேர்வுசெய்தார்.

- Advertisement -

சுப்மன் கில்லும், விரிதிமான் சஹாவும் குஜராத் இன்னிங்ஸை துவங்க வர, கில் உடனே சவுதியால் வெளியேற்றப்பட்டார். அடுத்த கேப்டன் ஹர்திக் வந்து சஹாவோடு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து, அரைசதமடித்து அணியைக் கரையேற்றி ஆட்டமிழந்தார். ஆனால் அதற்குப் பிறகு யாரும் சோபிக்காததால் 180 ரன்கள் வரவேண்டிய குஜராத்திற்கு 156 ரன்களே வந்தது.

குறிப்பாக கடைசி ஓவரை வீசிய ரஸல், அபினவ் மனோகர், லாகி பெர்குசன், திவாட்டியா, யாஷ் தயாள் என நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அணைக்கட்டினார். ஐ.பி.எல் வரலாற்றில் ஒரே ஒரு ஓவர் ஸ்பெல் வீசி நான்கு விக்கெட்டுகளை கைப்பறியவர் என்ற சாதனையை ரஸல் படைத்தார். இதற்கு முன்பு லஷ்மி ரத்தன் சுக்லா 3/6 [0.5] கொல்கத்தாவிற்காக 2008-ல் டெல்லிக்கு எதிராக வீழ்த்தினார். ஸ்ரேயாஷ் கோபால் ராஜஸ்தானிற்காக பெங்களூருக்கு எதிராக 3/12 என 2019-ல் வீழ்த்தினார்.

அதேபோல் ஒரு ஓவரில் ஐ.பி.எல்-ல் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில்,
இதற்கு முன்பு அமித் மிஸ்ரா புனே வாரியர்ஸ்க்கு எதிராகவும்,
யுஸ்வேந்திர சாஹல் இந்த ஆண்டு கொல்கத்தாவிற்கு எதிராகவும் வீழ்த்தி இருக்கிறார்கள்!

- Advertisement -