திடீரென காற்றில் பறந்து அபாரமாக கேட்ச் பிடித்த அம்பாத்தி ராயுடு ; தோனி வரை சிலிர்ப்பு – வீடியோ இணைப்பு

0
447

இன்று ஐ.பி.எல்-ல் சென்னை அணியும், பெங்களூர் அணியும், நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் மோதிய ஆட்டத்தில், முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் பாஃப் டூ பிளிசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னையின் துவக்க ஆட்டக்காரராக வந்த ருதுராஜிம், மொயீன் அலியும் நடையைக் கட்ட, இன்னொரு துவக்க ஆட்டக்காரரான உத்தப்பாவும், அடுத்து வந்த சிவம் துபேவும் சேர்ந்து பெங்களூர் அணி பவுலிங்கை நையப்புடைத்து எடுத்துவிட்டனர். இதனால் இருபது ஓவர்களின் முடிவில் சென்னை அணி 215 ரன்களை குவித்தது!

அடுத்து 216 என்ற பெரிய இலக்கோடு களமிறங்கிய பெங்களூர் அணிக்கு கேப்டன் பாஃப், அனுஜ், விராட்கோலி, மேக்ஸ்வெல் என நால்வரும் பெரிய ஏமாற்றமளிக்க, இந்த நிலையில் ஷாபாஸ் அகமத்துடன், சுயாஸ் பிரபுதேசாய் உடன் ஜோடி சேர்ந்து அச்சமில்லாமல் அடிக்க ஆரம்பித்தார்கள்.

- Advertisement -

ஆனாலும் சிறப்பாகச் செயல்பட்ட சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் இவர்கள் இருவரையும் வெளியேற்ற, பவுலரான ஆகாஷ் தீப் பேட்டிங்கிற்கு வர, கேப்டன் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் ஆகாஷ் தீப் பிளிக் செய்தார். பந்து காற்றில் மெதுவாக பறக்க, பந்திலிருந்து சற்றுத் தொலைவிலிருந்த 33 வயதான அம்பதி ராயுடு, உடலை காற்றில் மிதக்கவிட்டு பாய்ந்து அபாரமாக அந்தப் பந்தை கேட்ச் செய்தார். தோனி வரை தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அளவுக்கு அவரது கேட்ச் சிலிர்ப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது!